மே மாத ராசி பலன்கள் 2023 - ரிஷபம்

மதியால் விதியை வெல்லாம் என்று சொல்லும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் யோகாதிபதி சனி பத்தில் அமர்வதும். ராசிநாதன் ராசியிலும், விரையாதிபதி தனஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் உறுதியுடன் செயல்பட்டு உங்களின் காரியங்களை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். நேர்மையும், உண்மையும் உங்களின் திறவுகோலாக இருக்கும். நல்லபடியாக எதையும் சாதித்து காட்டும் திறமையை பெற்று விளங்குவீர்கள். கலைதுறையினருக்கு எதிர்பார்த்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வாய்ப்பு அமையும். நிலம் சம்மந்தமான சில பிரச்சனைகளில் நல்ல முடிவுக்கு வரும். அரசியலில் திடீர் மாற்றம் உண்டாகும். உங்களின் செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேன்மை தரும்.
சந்திராஷ்டம நாட்கள்:
08.05.2023 திங்கள் இரவு 08.28 முதல் 10.05.2023 புதன் இரவு 11.27 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
சிறிய காரியத்தடை இருந்தாலும், சில விடயங்களை முடித்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
குடும்பத்தில் சிலருக்கு புதிய செலவுகள் வந்து பொருளாதார நெருக்கடி உண்டாகும். தெளிவான நிலைபாடுகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
எந்த காரியத்திலும் முழு ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வர சகல காரியமும் வெற்றியை தரும்.