மே மாத ராசி பலன்கள் 2023 - மிதுனம்

மே மாத ராசி பலன்கள் 2023 - மிதுனம்

புதிய திட்டங்களுக்குரிய நல்வழியை தெரிவு செய்யும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு, ராசி அதிபதியுடன் குருவும், சூரியனும் லாபஸ்தானத்தில் இனணந்திருப்பது பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை பெற்றுத் தரும். உங்களின் சரியான முயற்சிகளுக்கு விரைவில் நல்ல பலனைக் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பான வளர்ச்சியையும், வளமையும் பெறுவீர்கள். அறிவியல் பூர்வமான காரியங்களில் புதிய சாதனைகளை ஏற்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நல்ல பலனை பெற்று தரும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறை சார்ந்த பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். உறவுகளிலிருந்து வந்த விரிசல் மறையும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
10.05.2023 புதன் இரவு 11.28 முதல் 12.05.2023 வெள்ளி இரவு 01.48 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
போட்டிகளில் உங்களின் பலத்தையும், திறமையும் வெளிபடுத்துவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக கருதி செயல்படுவீர்கள்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உடல் நலனில் இதுவரை இருந்து வந்த பிரச்சனை மறையும். கொடுத்த பணியில் உங்களின் பங்கை சிறப்பாக முடிப்பீர்கள்.
 
புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் சில காரியம் வெற்றி கரமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, தென்மேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
திங்கள் கிழமை காலை ராகு காலத்தில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், மாவு உருண்டையும் வைத்து வேண்டிக் கொள்ள, காரிய தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.