மே மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்

மே மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்

வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவின் அனுகிரகம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும். லாபஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதும், உங்களின் தொழில் சார்ந்த காரியங்களில் முன்னேற்றம் அமையும். ராசியில் சூரியன் உச்சம் பெறும் காலமென்பதால்.. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி. மரியாதை கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலத்தின் நோக்கங்களையும், திட்டங்களையும் செயல்படுத்த துவங்குவீர்கள். உங்களின் ராசிநாதன் செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் அமர்வது வெற்றியை பெற்று தரும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
06.05.2023 சனிகிழமை மாலை 03.59 முதல் 08.05.2023 திங்கள் இரவு 08.27 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலத்தை வீணடிக்காமல் காரியத்தை விரைந்து முடிப்பீர்கள். புதிய தொழில் துவங்கும் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினருக்கு எதிர்கால திட்டங்கள் மேன்மை அடையும். குறைந்த நேரத்தில் நீங்கள் சாதிக்க நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

கார்த்திகை 1ம் பாதம்:
 
உதவி கேட்டு உங்களை நாடி வருபவருக்கு, காரியங்களை செய்து தருவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கில் முன்னேற்றம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, நீலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, நீலம், வெண்மை.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிகிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வணங்கி வர, விரைவில் அனைத்து காரியமும் நிறைவேறும்.