மே மாத ராசி பலன்கள் 2023 - மீனம்

மே மாத ராசி பலன்கள் 2023 - மீனம்

எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நற்பலன் பெற்று தருவார். விரைய சனி காலம் என்பதால், வரும் வருமானத்தை சுபமான விரயமாக அமைத்து கொள்வது நல்லது. காலி மனை, காணி, வீடு கட்டுதல், திருமணம் செய்தல் போன்ற சுபசெலவுகளை உருவாக்கி கொள்வது நல்லது. உங்களின் அனைத்து தேவைகளையும், நல்ல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் உங்களுக்கு கூட்டு மூலம் நல்ல நண்பர்கள் அமைத்து அதன்மூலம் வளம் பெறுவீர்கள். அரசியலிலும் சிலருக்கு அறிமுகம்  கிடைத்து நன்மை உண்டாகும். கலைதுறையினரின் இசை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பாராட்டு பெறுவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு, உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். பொது நலன் கருதி நீங்கள் செயல்படும். ஒவ்வொரு நிகழ்வும் உங்களுக்கு சாதகமாக அமையும் நல்லதை உடனே செய்யுங்கள். பலனையும் உடனே அடையுங்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
04.05.2023 வியாழன்கிழமை 09.21 முதல் 06.05.2023 சனி மாலை 03.58 மணி வரை.
31.05.2023 புதன் மாலை 04.59 முதல் 02.06.2023 வெள்ளி இரவு 11.53 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

பூரட்டாதி 4ம் பாதம்:
 
எதையும் பொறுமையுடன் செய்து நன்மைப் பெறுவீர்கள். தொழிலில் நிதானமாக செயல்பட்டு, அதிக லாபம் பெறுவீர்கள். உறவுகளில் சிலர் உங்களுக்கு பகையை உணர்த்துவார்கள்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உழைப்பால் முன்னேற்றம் பெற வேண்டுமென்று எண்ணும் உங்களின் செயல்களின் மூலம் நன்மை பெறுவீர்கள். முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும்.
 
ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினருக்கு சிறந்த காலமாகவும், பொருளாதாரத்தில் வளம் பெறுவீர்கள். ஆன்மீக சேவைகளின் மூலம் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளின் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வெள்ளை நிற பூ வைத்து வணங்கி உங்களின் வேண்டுதலை சொல்லி வர, எல்லாம் சிறப்பாக அமையும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554