மே மாத ராசி பலன்கள் 2023 - மகரம்

திடமான நம்பிக்கையும், வலிமையும் கொண்ட மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி தனஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைவதும். குரு மறைவு ஸ்தானங்களை பார்ப்பதும் நல்ல பலன்களை பெற்று தரும். நிலையான தொழில் அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல தொழில் அமையப் பெறுவீர்கள். குடும்பத்தில், இருந்து வந்த சச்சரவு முடிவுக்கு வரும். அரசியலில் புதிய மாற்றம் உண்டாகும். இதுவரை ஒதுங்கியிருந்த உங்களின் செயல்பாடுகள், மீ்ணடும் வளம் பெறத் துவங்கும். காரிய தடைகளிலிருந்து மீண்டு, உங்கள் செயல்பாடு மேன்மை அடையும். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைவர். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர். புதிய முயற்சிகளின் மூலம் வளர்ச்சியைப் பெற்று நலம் பெறுவீர்கள். பெண்களுக்கு சிறந்த முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நலம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
26.05.2023 வெள்ளி இரவு 08.24 முதல் 29.05.2023 திங்கள் காலை 07.37 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த இடையூறுகள் மறைந்து, புத்துணர்வுடன் செயல்பட்டு வருவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
வாரா கடன் வசூலாகும். எதிர்பார்த்த பண வரவு விரைவில் வந்து சேரும். பொது வாழ்வில் உங்கள் சேவை கூடுதலாக நன்மதிப்பை பெற்று தரும்.
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
சாதுர்யமான முறையில் செயல்பட்டால் தன்மை உண்டாகும். விளையாட்டு துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் மூலம் உங்களுக்கு நற்பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், வெள்ளிகிழமை அம்மன் வழிபாடும் செய்து, விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ள, சகல காரியமும் வெற்றியை தரும்.