மே மாத ராசி பலன்கள் 2023 - கும்பம்

மே மாத ராசி பலன்கள் 2023 - கும்பம்

எதையாவது சாதிக்கவேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக ராசிநாதன் அமர்ந்து உடல் பலம், மன பலத்தை தந்து எதை செய்தாலும் அதில் வலிமையுடன் செயல்படும் படி அருள்புரிவார். காரணமில்லாமல் எந்த காரியமும் இயங்காது. நினைத்ததை நினைத்தபடி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து, அவரது பார்வை படுமிடமான ஏழாமிடம், ஒன்பதாமிடம், லாபஸ்தானத்தில் அமைவது உங்களுக்கு ஊக்கத்தையும், நற்பலன்களையும் பெற்று தரும். உறுதியுடன் செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த இனம் தெரியாத கவலையும், சங்கடமும் மறையும். தொழிலில் முன்பைவிட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உலக நாடுகளின் மூலம் உங்களுக்கு நற்செய்தியும், தொழில் வாய்ப்பும் அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
01.05.2023 திங்கள் இரவு 12.14 முதல் 04.05.2023 வியாழன் காலை 09.20 மணி வரையும்,
29.05.2023 திங்கள் காலை 07.38 முதல் 31.05.2023 புதன் மாலை 04.58 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
ஆற்றலும், வெளிப்படையான செயல்பாடுகளும் உங்களை ஊக்கப்படுத்தும். குடும்ப நன்மைக்காக பல விடயங்களை விட்டு கொடுத்து நடப்பீர்கள்.
 
சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு நன்மையை தரும். கடந்த கால சங்கடங்களில் இருந்து விடுபட்டு மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
 
பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவு செய்து உங்களின் குடும்ப சூழ்நிலையை கஷ்டமின்றி நடத்தி நன்மை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
சனி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் எல்லாம் சிறப்பாக நடக்கும்.