மே மாத ராசி பலன்கள் 2023 - கன்னி

மே மாத ராசி பலன்கள் 2023 - கன்னி

திறமையும், வளமையும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் அமர்ந்த சனி. யோக சனியாக அமைவதும்.. உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களை காத்து கொள்ளவும், கடனிலிருந்து விடுபடும் வாய்ப்பையும் பெறுவீர்கள். இதுவரை சுமையாக இருந்த அனைத்து காரியமும் எளிமையாக அமையப் பெறும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு, இனி தனஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்ப்பதும். உங்களின் பாதகாதிபதி குரு எட்டில் மறைவதும், குருவால் வரும் துன்பம் மறையும். எட்டாமிடத்தில் அமர்ந்து பனிரெண்டை பார்ப்பது உங்களுக்கு அதிக விரையமாகாமல் தடுக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
17.05.2023 புதன் காலை 08.14 முதல் 19.05.2023 வெள்ளி பகல் 02.00 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிப்படையான விடயங்களில் உங்களின் வளர்ச்சிக்கு தகுந்த தளம் வகுத்து, வளம் பெறுவீர்கள். பொருளாதார வளம் கிட்டும்.
 
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதிக்க நினைத்த காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள். முக்கிய விடயங்களில் உங்களின் ஈடுபாடுகள் மிக சிறப்பான வளர்ச்சியை தரும்.
 
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
 
புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். காரிய தடைகளை வென்று லட்சியத்தை அடையும் உன்னத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, வெள்ளை, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை, ஞாயிறுகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடுகளை தொடர்ந்து செய்வதன் மூலம், உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்து கொண்டு முன்னேறுவீர்.