மே மாத ராசி பலன்கள் 2023 - கடகம்

மே மாத ராசி பலன்கள் 2023 - கடகம்

தர்மத்தை நிலை நாட்டுவதன் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வதும், சனி அட்டமஸ்தானத்தில் அமர்வதும், சில நேரம் கஷ்டங்களையும், சில நேரம் யோகத்தையும் தருவார்கள். பொதுவான வளர்ச்சிக்கு பாடுபடும் உங்களின் நல்ல நோக்கம் தடையின்றி இருக்கும். பொது நலமின்றி சுயநலம் கொண்டால் பல்வேறு வித தடைகளும், நெருக்கடிகளும் வந்து சேரும். இனி உண்மையை பேசியும், பிறரை வாழவைப்பது கொள்கையாக கொண்டால் எத்துன்பமுமின்றி வளம் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கி நினைத்ததை எளிதில் அடைவீர்கள். கலைதுறையினரும், அரசியல் வாதிகளும் நல்ல வளர்ச்சிக்கு வழி கிடைக்கப் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
12.05.2023 வெள்ளிகிழமை இரவு 01.49 முதல் 15.05.2023 திங்கள் அதிகாலை 04.23 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
புனர்பூசம் 4ம் பாதம்:
 
கிடைத்ததை வைத்து சிறக்க வாழ்வீர்கள். எப்பொழுதும் அமைதியை விரும்பி காரியத்தில் கவனம் செலுத்தி அதற்குரிய பலனை பெறுவீர்கள்.
 
பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கடமையை செய்து வளம் பெறுவீர்கள். முன் போல் உங்களின் செல்வாக்கை நிலை நாட்ட பாடுபடுவீர்கள். உங்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டும்.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதை தெரிவு செய்தாலும் அதற்குரிய வழியை பின்பற்றி செய்து வருவீர்கள். திடமான நம்பிக்கை உங்களை வழிநடத்தி, வாழ வைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், புதன், வெள்ளி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல நலனும் உண்டாகும்.