மே மாத ராசி பலன்கள் 2023 - தனுசு

மே மாத ராசி பலன்கள் 2023 - தனுசு

தைரியமும், துணிச்சலும் கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறுவதும், உங்களின் மூன்றாமிடத்தில் சனி அமர்ந்து விரையஸ்தானத்தை பார்ப்பதும் உங்களுக்கு தொழிலிலும், உங்களின் முயற்சிக்கு நல்லபடி வெற்றியைப் பெற்று தரும். எதையும் சொல்லி விட்டு செய்யாமல் உடனே செய்து முடிக்கும் தைரியம் படைத்த உங்களின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த பதவிகளும், ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். குறுகிய கால வளர்ச்சியை அடைவீர்கள். முக்கியமான காரியங்களில் ஈடுபடும் போது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைதுறையினருக்கு வாய்ப்புக்கள் தேடி வரும். பொருளாதார வளம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
24.05.2023 புதன் காலை 08.42 முதல் 26.05.2023 வெள்ளி இரவு 08.23 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலத்திற்கு தகுந்தபடி உங்களின் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார வளம் கிட்டும்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காரியத்தில் கவனம் செலுத்தி உங்களின் செயல்பாடுகளை அமைத்து கொள்வீர்கள். கலைதுறையினருக்கு வளர்ச்சி உண்டாகும். எதிரிகளை வெல்லும் வாய்ப்பு அமையும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
அரசியல் பிரவேசம் நல்ல முன்னேற்றம் தரும். தொழிலில் சிறந்த நிலையை அடைவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் நல்ல மரியாதை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
பிரதோச காலத்திலும், திங்கள் கிழமையிலும் சிவ வழிபாடு செய்வதும், விளக்கு ஏற்றி நந்திக்கு வழிபாடு செய்வதும் நற்பலன்களை பெற்றுத் தரும்.