மே மாத ராசி பலன்கள் - 2022 - விருச்சிகம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - விருச்சிகம்

விடாமுயற்சியும், கொள்கை பிடிப்பும் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவதும் உங்களும் பக்க பலமாக அமையும் எந்த தொழிலாக இருந்தாலும் தடையின்றி செயல்படுவது துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள். சில காரியத்தை பற்றி சிந்திக்காமல் மனவலிமையுடன் செயல்படுவீர்கள். தொழிற்சங்க பிரதிநிதிகளின் சந்திப்பின் உங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பீர்கள். தொழிற்  சங்க பொறுப்புகளை வகித்து எல்லோரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் தருவீர்கள். சில காரியங்களை கால தாமதமாக செய்தாலும் லாபம் காண்பீர்கள். விளையாட்டு துறையினர் நன்றாக விளையாடி பரிசுகளை வெல்வார்கள் சோதனை காலத்தில் உதவி செய்தவர்களை மறக்காமல் நல்ல நண்பராக அவரை பாராட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்குதல். வாகன பழுது நீங்கி புதுப்பித்தல் நடக்கும் எல்லாம் நன்றாக நடக்க உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.  
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
04.05.2022 புதன் மாலை 04.03 முதல் 07.05.2022 சனி அதிகாலை 03.45 மணி வரையும்.
 
31.05.2022 செவ்வாய் இரவு 11.19 முதல் 03.06.2022 வெள்ளி பகல் 11.04 மணி வரையும்.
 
நட்சத்திர பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்:
 
விடாபிடியும், அதே சிந்த னையிலும் தொடர்ந்து முயற்சி செய்து, அதனை விரைவில் முடிப்பீர்கள். திருமண காரியங்களை முன்னின்று, நடத்தி வைப்பீர்கள். விளையாட்டு துறையில் சிறப்பான பலன் அமையும்.
 
அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அலைச்சலை குறைத்து வேலையின் தன்மையை மாற்றியமைத்து கொள்வீர்கள். சுமை தாங்கியாக குடும்பத்தில் இருந்து வந்த உங்களுக்கு கஷ்டம் குறைந்து மேலும் நற்பலன்களை பெறுவீர்கள்.
 
கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சொல்லிலும் செயலிலும் ஒருமித்த கருத்தை உருவாக்க நீங்கள் பல முயற்சிகள் எடுப்பீர்கள். புனித யாத்திரை சென்று வருவீர்கள். விரைவில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, தென்மேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் ராகு காலத் தில் மாரியம்மன் வழிபாடு செய்து அரிசி மாவு விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி வேண்டிக் கொள்ள எந்த காரியமாக இருந்தாலும் முழு வெற்றியை தரும்.