மே மாத ராசி பலன்கள் - 2022 - சிம்மம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - சிம்மம்

வாழ்க்கைக்குரிய செயல் களை கணக்கிட்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கியஸ் தானத்தில் உச்சம் பெற்று பாக்கியஸ்தானாதிபதி செவ்வாயின் பார்வை ராசிக்கு இருப்பதும் மிக நல்ல பலனை பெற்று தரும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் செயல்படுவீர்கள். மிகவும் எளிய முறையில் உங்களின் செயல் இருந்தா லும்கூட மிகவும் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். அரசியலி லும், பொது வாழ்விலும் உங்களின் பங்கு மிக சிறப் பாக அமையும். வளமான எதிர்கால விடயங்களின் நல்ல ஆலோசனை பெற்று தன் சுய கட்டுபாட்டுக்குள் எல்லாவற்றையும் செய்து வர ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழிலில் தொய் வான நிலைமாறி புதிய உத்வேகத்தில் செயல்படுவீர்கள். காரிய அனுகூலமான விடயங்களை சொந்த பொறுப் பில் செய்து கொள்வீர்கள். அரசாங்க உத்தி யோகத்தில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய சகாப்தத்தை உருவாக்கிட உங்களின் முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களை ஏமாற்ற நினைத்தவரை அடையாளம் கண்டு கொண்டு உஷாராகிவிடுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட சில காரியதடை நீங்கும். பொரு ளாதாரத்தில் ஏற்றம் பெற்று வாழ்வீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
24.05.2022 செவ்வாய் இரவு 08.45 முதல் 27.05.2022 வெள்ளி அதிகாலை 03.13 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கொள்கை பிடிப்புடன் செயல்படும் உங்களுக்கு பலரின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி வெற்றி காண்பீர்கள். அரசியலில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
 
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதனைகளை செய்ய வாய்ப்புகளை அமைத்து அதற்கு தக்க வழிகளை கடைபிடித்து வெற்றியும் காண்பீர்கள். கலை துறையினர் ஆர்வம் மிக பெற்று பல நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். சிலரின் செயல்களை கண்டு அதை தடுக்கும் முயற்சியை எடுப்பீர்கள். அதற்கு தக்க சூழ்நிலையை உரு வாக்கி கொள்வீர்கள். அரசியலில் தனித்துவம், மிக சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடும், மிளகு திரியில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு தீபமும் இட்டு வணங்கி வர, உங்களின் சகல காரியத்திலும் வெற்றியை பெறுவீர்கள்.