மே மாத ராசி பலன்கள் - 2022 - மிதுனம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - மிதுனம்

சிறப்பான விடயங்களை தேர்வு செய்ய நினைக்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தானாதிபதியுடன் சூரியன் இணைவு பெறுவதும் உங்களின் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி யுடன் பூர்வ புண்ணியாதிபதி உச்சம் பெறுவதும் வெளிநாட்டு பயணம் தடை நீங்கி வளம் பெறலாம். நிலை யான சில காரியங்களை மேம்படுத்திக் கொள்வீர் கள். எதையும் காலம் கடத்தி தாமதம் செய்யாமல் செயலில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் எதிர்கால வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். துணிச்சலான சில செயல்பாடுகளில் உங்கள் எண்ணம் போல சில காரியங்கள் நிறைவே றும். உங்களின் தானாதிபதி லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களுக்கு ஊக் கத்தைப் பெற்று தரும். தொழில் ஸ்தானாதிபதி பார்வை தனஸ்தானத்தில் படுவதும் உங்களின் பொருளாதார மேன்மையை ஏற்றம் பெற செய்யும். சிலர் உங்களின் உழைப்பை நிர்ணயம் செய்து ஏற்றம் பெறுவீர்கள். லாபாதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ராசி அதிபதியை பார்ப்பதும் நன்மையை உருவாக்கும். அறிவியல் ஆராய்ச்சியை செய்து வருபவருக்கு புதிய கண்டுபிடிப்பு உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
20.05.2022 வெள்ளி பகல் 01.25 முதல் 22.05.2022 ஞாயிறு பகல் 04.21 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
நல்ல காரியத்தை தள்ளி போடாமல் உடனே செய்து விடுவது மிகவும் நல்லது. அருகிலுள்ள நண்பர்களின் உதவி உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும். விளை யாட்டு துறையினர் சிறப்பான நற்பலன் பெறுவீர்கள்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
திட்டமிட்டு செய்யும் காரியம் நன்மையாக அமையும். எதையும் உன்னிப்பாக பார்த்து செயல்படுத்துவீர்கள். பழைய நினைவுகளை நினைத்து இந்த வாழ்வுக்கு என்ன என்பதை அறிய முயற்சி செய்வீர்கள்.
 
புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
பூர்வீக சொத்துகள் சம்மந்தமான சில விடயங் கள் நல்ல வளர்ச்சியை தரும். குடும்ப பாரத்தை சிலருக்கு இறக்கி வைக்கும் நிலை உண்டாகும். அவசர முடிவு கூடாது. நிதானம் நிம்மதியை தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, மேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும், ஞாயிறுகிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து வர உங்களின் வாழ்வு சிறப்பாகவும், தொழிலிலும், உத்தியோகத்திலும் வளம் பெறுவீர்கள்.