மே மாத ராசி பலன்கள் - 2022 - மேஷம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - மேஷம்

கண்ணியமாக எதையும் எதிர்கொண்டு செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சூரியன் உச்சம் பெற்றும், ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பதும் மிக சிறப்பான பலனாக அமையும். எதையும் தனி திறமை கொண்டு செயல்படுவீர்கள். குறுகிய காலத்தில் செய்யும் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தனாதிபதி விரயத்தில் உச்சம் பெறுவது எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உங்களின் நண்பர்கள் துணை நிற்பார்கள். வெளிநாடு செல்ல நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனை பெற்றுத் தரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் முடிவுக்கு வரும். தொழிலில் கடந்த காலத்தில் இருந்து வந்த தேக்க நிலை மறையும். அதிகமான அலைச்சலும், உடல் அசதியும் வந்து சிலருக்கு சிரமம் உண்டாகும். காலத்தை அறிந்து வளர்ச்சி பாதையை தேர்வு செய்து பயணம் செய்பவர்களுக்கு சிறப்பான வளம் கிட்டும். தாமதம் செய்பவர்களுக்கு வருமானம் இழப்பும், கடுமையான பணநெருக்கடியும் உண்டாகும். அதிக தூர பயணம் தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
16.05.2022 திங்கள் கிழமை காலை 08.20 முதல் 18.05.2022 புதன்கிழமை பகல் 11.01 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதையும் எளிமையாக செய்து விரைவில் முடித்து விடுவீர்கள். தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் இடமாற்றமும் உண்டாகும். கலை துறையினருக்கு பாராட்டு கிடைக்கும்.
 
பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
புதிய விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கலை துறையில் உங்களின் பங்கு சிறப்பாகவும் புதிய உடன் படிக்கையும் உண்டாகும். வாகன வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். பழைய கடன் அடைந்து புதிய கடன் வரும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் முடிவுக்கு வரும். தனியாக எதையும் செய்ய நினைப்பீர்கள். மருத்துவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். புதிய விடயங்களில் பணவிரயமும் அதிக அலைச்சலும் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
நவகிரக வழிபாடு வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு போட்டு, மஞ்சள், பால் வைத்து வழிபாடு செய்து வர உங்களின் கோரிக்கைகள் விரைவில் தரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.