மே மாத ராசி பலன்கள் - 2022 - மீனம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - மீனம்

சுயநலமின்றி பொது நல கருத்துகளை வரவேற்கும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி பெற்று இருப்பதும் பூர்வ புண்ணியாதிபதி சந்திரன், சூரியனுடன் இணைவு பெறுவதும் நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். அதுபோல குரு பார்வை பெறும் இடங்களும் உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். சாதனைகளை செய்ய காத்திருந்த உங்களுக்கு அதற்கான வாய்ப்பை பெற்று தரும். நல்ல நண்பர் சேர்க்கையால் பல புதிய யுக்திகளை கையாண்டு புதிய தொழில் முயற்சிகளை செய்து உங்களின் வளர்ச்சி வழிவகுத்து கொள்வீர்கள். பயனுள்ள பயணங்களாக உங்களின் பயணம் அமையும். சுதந்திரமாக முடிவு எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். மறைமுக உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் படித்த கல்விக்கு தகுந்த வேலையை பெறுவீர்கள். குடும்பத்தில் நடக்கும் சகல குழப்பங்களும் இனி முடிவுக்கு வரும். அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் அரசியல் தொடர்பு உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
14.05.2022 சனி அதிகாலை 04.30 முதல் 16.05.2022 திங்கள் காலை 08.21 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

பூரட்டாதி 4 ம் பாதம்:
 
புதிய திட்டங்களை செயல்படுத்தும் காலமாக அமையும். திறமை இருந்தும் செயல்படாமல் இருந்த உங்களுக்கு ஊக்கம் தர நண்பர்களின் உதவி கிடைக்கும். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
 
உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அவசர காரியங்களில் நிதானமும், நிதானமான விடயங்களில் காரிய சித்தியும் பெறுவீர்கள். பணியாளர்களின் சலுகைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிற் சாலைகளின் அமைதியும் உற்பத்தி பெருக்கமும் உண்டாகும்.
 
ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
நிறைவான பணிகளை செய்து உங்களின் செயல்களில் கூடுதல் முன்னேற்றம் பெறுவீர்கள். காலத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலையை மாற்றிக் கொள்வீர்கள். பொருளாதார நிலை வளம் பெறும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு,
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மனுக்கு தேசிகாய் விளக்கு நெய் தீபம் போட்டு வணங்கி வர உங்களின் அனைத்து காரியமும் வெற்றியும், தொழிலில் வளம் பெறுவீர்கள்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554