மே மாத ராசி பலன்கள் - 2022 - கும்பம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - கும்பம்

பாதுகாப்பான சூழ்நிலையை எப்பொழுதும் உருவாக்கி கொள்ளும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி உச்சம் பெற்றும் தனாதிபதி ஆட்சி பெற்றும் குரு பார்வை பெறும் மறைவு ஸ்தானங்கள் பலம் பெற்று விளங்குவதால் உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும். எதை சாதிக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அந்த காரியத்தை விரைவில் முடித்து விடுவீர்கள். புத்துயிர் பெற்று பலம் பெற்று விளங்குவீர்கள். அரசியலில் பல சோதனைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி பெருமைபடும் படியான வளர்ச்சியை பெறுவீர்கள். கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலில் பல தோல்வியை கண்டு வந்த உங்களுக்கு தொழில் விருத்தி உண்டாகி, பணபுழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகி சம்பள உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
11.05.2022 புதன் இரவு 10.37 முதல் 14.05.2022 சனி அதிகாலை 04.29 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
அவசர வேலைகளை தள்ளி வைத்து விட்டு அதைவிட முக்கியமான பணிகளை செய்து செய்து நல்ல பலன் பெறுவீர்கள். உங்களின் செயல்களை உன்னிப்பாக கவனித்து உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.
 
சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதிக்க எண்ணிய விடயங்களை தவறாமல் செய்து முடிப்பீர்கள். உறுதி தன்மையுடன் செயல்பட்டு உங்களின் காரியத்தில் வெற்றியின் இலக்கை அடைவீர்கள். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
 
பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
புகழ்ச்சிக்கு மயங்காமல் உங்களுக்கு கொடுத்த வேலையை செய்து வளம் பெறுவீர்கள். சரியான நேரத்தில் செயல்பட்டு பாராட்டு பெறுவதுடன் நல்ல பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் தொழிலில் நல்ல வளம் பெற்று பொருளாதார நன்மையும் பெறுவீர்கள்.