மே மாத ராசி பலன்கள் - 2022 - கடகம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - கடகம்

காலத்தை கணக்கிட்டு அதன்படி செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் தனஸ்தான திபதி இணைந்து தொழில் ஸ்தானத்தில் அமர்வதும், குரு உங்களின் ராசியை பார்ப்பதும் சனி பார்வை பெறுவதும். நீங்கள் எடுத்த காரியத்தை வெல்லும் வல்லமையை பெறுவ துடன் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எதிலும் எதையும் எப்போழு தும் உங்களின் கருத்தில் வைத்து செயல்படும் திற மையை பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் விரையாதிபதி புதன் அமர்ந்து உங்களின் செயல்பாடுகளில் மேன்மை பெறுவதுடன் செயலில் சுறுசுறுப்பும் அமைய பெறுவீர்கள். அரசியல் சூழ்நிலைகளை மாற்றி அரசியலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழிற்சங்கங்களை வழி நடத்தும் திறமையும். தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்படுவீர் கள். எதற்காகவும் எதையும் விட்டு கொடுக்கமாட்டீர்கள். முதலீடுகள் இல்லாத தொழிலில் சிலருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வந்தாலும் அதனை காரணமின்றி தள்ளிபோடுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு உங்களை ஊக்கப்படுத்தும். செயலிலும் சொல்லிலும் மேன்மை அடை வீர்கள். பொருளாதார நிலையில் மேன்மை பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
22.05.2022 ஞாயிறு மாலை 04.22 முதல் 24.05.2022 செவ்வாய் இரவு 08.44 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
புனர்பூசம் 4ம் பாதம்:
 
எதிர்கால நலனுக்காக சில காரியங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலில் வளம் பெற்று பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
 
பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் பயனுள்ளதாகவும் நல்ல வளமும் பெறுவீர்கள். தொழிலாளர்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும். தேவைகளுக்கு தகுந்த வசதி கிடைக்கும்.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலை துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும், நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கிடைக்க பெறுவீர்கள். தீவிர செயல்பாடுகள் மூலம் வெற்றி பெறு வீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், சுப்ரமணியர் வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றி பெறுவதுடன் மேலும் தொழில் வளம் பெற்று, பொருளாதார வளர்ச்சியும் பெறுவீர்கள்.