மே மாத ராசி பலன்கள் - 2022 - தனுசு

மே மாத ராசி பலன்கள் - 2022 - தனுசு

எதிலும் தொடர்ந்து செயல் படத் துடிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறும இடங்கள் சிறப்பாக அமையும். பஞ்சமாதிபதி செவ்வாய் மூன்றாமிடத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தையும் தொழில் ஸ்னதாத்தையும் பார்வை இடுவது மிக சிறந்த பலனாகவும். தைரியமும் துணிச்சலும் பெறுவீர்கள். உங்களின் எட்டாமிட சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைவதும் சந்திரன் வீட்டை குரு பார்வை இடுவது சிறப்பான பலனாக அமையும். நீங்கள் எதை நினைத்து செயல்படுகிறீர்களோ அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் பயணம் இனிதாக அமையும் உறுதியான செயல்பாடுகளால் நிறைவாக அமையும். தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது சிறந்த நற்பலனை பெறுவீர்கள். பொது விடயங்களில் சிறந்த பிரமுகர்களாக இருப்பீர்கள். நீங்கள் சரியான வளர்ச்சியை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் மிக சிறந்த வளர்ச்சியையும் பெருமையையும் அடைவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
07.05.2022 சனி அதிகாலை 03.46 முதல் 09.05.2022 திங்கள் பகல் 02.18 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதிக்க நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறுதியான உங்களின் செயல்பாடுகள் நன்மையை தரும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கால நிர்ணயமின்றி உழைப்பீர்கள். எதையும் முடிக்கும் வரை உங்களின் செயல்பாடு இருந்து கொண்டே இருக்கும் கலை துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் திறமை வெளிப்படும் சிறந்த காரிய வாதியாக இருப்பீர்கள். பொது வாழ்வில் உங்களின் வரவு சிறந்த வளர்ச்சியை தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பலவர்ணம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் செய்து விளக்கு ஏற்றி, உங்களின் வேண்டுதலை சொல்லி வர, தடை நீங்கி நன்மை கிட்டும்.