மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - விருச்சிகம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - விருச்சிகம்

நிரந்தரமான தொழிலில் செய்ய வேண்டுமென்று நினைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிககு ராசிநாதனுடன் யோகாதிபதி சந்திரன் உச்சம் பெற்று ராசியை பார்ப்பதும், குரு பார்வை ராசிக்கு இருப்பதும் உங்களின் அனைத்து காரியங்களும் நற்பலனை பெற்று தரும். உறுதியான முடிவு எடுப்பதும் எதையும் செய்யும் முன்பு யோசித்து செய்வதும் உங்களின் வாழ்வில் மேன்மை அடைய நல்ல காலமாக அமையும். எடுத்த காரியம் முடிக்கும் வரையில் உங்களின் செயல்களின் கவனம் செலுத்தி நற்பலன் பெறுவீர்கள். முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஓன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் அன்பு ஆசை காட்டி இனிக்க பேசுபவர்களை நம்பாதீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களை சனியான பாதையை காட்டி வளம் செய்வார்கள். பொருளாதாரம் வளம் பெறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
28.03.2023 செவ்வாய் காலை 07.28 முதல் 30.03.2023 வியாழன் மாலை 06.17 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

விசாகம் 4ம் பாதம்:
 
உங்களின் பிடிவாத குணத்தை மாற்றி கொள்வீர்கள். எதையாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். தொழிலில் வருமானத்தை சேமிக்கும் வாய்ப்பு அமையும்.

அனுஷம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உழைப்பவர்களின் பக்கம் நின்று அவர்களுக்காக பாடுபடுவீர்கள். தொழிலில் எதையும் விற்று காசு ஆக்கி விடுவீர்கள். உறவுகளை பலபடுத்தி கொள்வீர்கள்.
 
கேட்டை 1. 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சில பெண்களுக்கு திருமண தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஓரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியர் வழிபாடு செய்து மனதில் பட்ட கவலைகளை வேண்டி விளக்கெண்ணெய் தீபம் பற்றி வழிபாட சகல காரியமும் வெற்றியை தரும்.