மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - துலாம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - துலாம்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்று உணர்ந்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி பகவான் பார்வை தவிர வேறு கிரக பார்வை இல்லை. ராகு ராசியை பார்ப்பதால் ஏதாவது துண்டுதல்களால் சில சங்கடம் வந்து சேரும். உங்களின் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக அமரும் சனியினால் பல துன்பங்களை பட்டாலும் உங்களின் யோகாதிபதி என்பதால், பெரும் துன்பம் ஏற்படாது என்றாலும் இம்மாத இறுதியில் உங்களின் பஞ்சமஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவது நன்மையை தரும். கடந்த கால கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். அதிகார வர்க்கத்தால் பல இல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைதுறையினருக்கு தடைபட்டு இருந்த பணிகளை மீண்டும் தொடரும் வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விடுவீர்கள். அரசியலில் புதிய மாற்றம் உங்களுக்கு ஏற்படும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
25.03.2023 சனிக்கிழமை இரவு 10.47 முதல் 28.03.2023 செவ்வாய் காலை 07.27 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
கடந்த கால போட்டிகள் மறையும் திசைக்கு ஒரு காரியமாக இதர கிடந்த பணிகள் சீராக நடக்கும். எதிர்ப்புகள் குறையும் நினைத்ததை சாதிப்பீர்கள்.
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலத்தை கணிக்கிட்டு காரியத்தில் இறங்கி சிறப்பாக செயல்படுவீர்கள். பொறுமையும், நிதானமும் உங்களின் செயல்களில் நன்மையை பெற்று தரும்.
 
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
மகிழ்ச்சியை விரும்பி உங்களின் குடும்ப ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பின் உங்களின் வளர்ச்சி பெருகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, நீலம், ஆரஞ்சு,
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு அன்று மாலை 04.30 முதல் 06.00-க்குள் நவகிரக வழிபாடு செய்து ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் நன்மையும், பொருளாதாரம் பெறுவீர்கள்.