மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - சிம்மம்

நேர்மையும், உண்மையும் விரும்பிச் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும் தனாதிபதி புதன் பார்வையும் பெறுவதும் ஆறாமிட சனி பார்வை உங்களின் மூன்றாமிடத்தில் பதிவதும் தொழிலில் முன் முயற்சிகளில் தைரியமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அரசியலில் தன்னிகர் இல்லாத செயல்களை செய்தும் உறுதியான செயல்பாடுகளை வெற்றும் வளம் பெறுவீர்கள். குரு பார்வை தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தை பார்ப்பதும். வருமானத்தில் தன்னிறைவு பெறுவீர்கள். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செலவுகளை குறைத்துள் கொள்வீர்கள். எதிலும் ஏமாற்றமின்றி நன்மைகளை பெறுவீர்கள். இம்மாத இறுகியில் சனி பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதும் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசியலில் உங்களுக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
21.03.2023 செவ்வாய் பகல் 12.28 முதல் 23.03.2023 வியாழன் மாலை 04.35 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
கஷ்டமும், நஷ்டமும் இருந்தாலும் சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள் நல்ல பலனையும், வருமானம் கிடைக்கும்.
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
நிதானமான உங்களின் செயல்பாடுகளால் எதையும் உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் குறைந்து நண்பர்களின் உதவியுடன் நற்பலனை பெறுவீர்கள்.
உத்திரம் 1ம் பாதம்:
அரசியலில் உன்னதமான பலனை பெறுவீர்கள். எடுத்த காரியம் வெற்றியை தரும். நினைத்த காரியம் ஈடேற உங்களின் முயற்சி நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழகிழமை நவகிரக குருவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வாழ்க்கையில் எல்லாம் சுபமாக அமையும்.