மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - ரிஷபம்

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பும் ரிசப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் ராசிநாதனுடன், குரு ஆட்சி பெற்று இருப்பதும் ராசியில் மூன்றாமிடத்து அதிபதி உச்சம் பெற்று இருப்பதும் உங்களின் தொழில் ஸ்தானத்தில் சூரியன் பலம் பெற்று இருப்பதும் தனாதிபதியுடன் இணைவு பெற்று இருப்பதும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் எதிர்கால திட்டங்களின் முன் முயற்சிகளும் உங்களை ஊக்கபடுத்தும் எதிரிகளால் இருந்து வந்த தொல்லை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். விரைவான சில நற்காரியங்களில் உங்களின் செயல்பாடுகளால் நன்மை பெறுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். கலைதுறையினர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வளம் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி உயர்ந்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பெண்களின் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
சந்திராஷ்டம நாட்கள்:
15.03.2023 புதன் அதிகாலை 4.36 முதல் 17.03.2023 வெள்ளி காலை 07.20 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் திறமை வெளிபடும். உங்களுக்கு என்று தனித்தன்மையை நிலைநாட்டுவீர்கள். புதிய அரசியல் பதவி கிடைக்கும்.
ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
மகிழ்ச்சியான பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்வீர்கள். மருத்துவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தாயார் உடல்நிலை வளம் பெறும்.
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
விளையாட்டு துறையினர் முன்னேற்றம் பெறுவீர்கள். நிலம் சம்மந்தமான விடயங்கள் நல்ல தீர்வாகும். தைரியமாக உங்களின் கருத்து வெளிபடுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமை சுப்ரமணியிருக்கு சிவப்பு நிற துணி கட்டிசிவப்பு பூ வைத்து நெய் தீபமிட்டு வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.