மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மிதுனம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மிதுனம்

புண்ணியமான காரியங்களின் ஈடுபாடு கொண்ட மிதுன ராசி வாசகர்களுக்கு!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் ராசிநாதனும் முயற்சி ஸ்தானாதிபதியும் அமர்ந்தும் தொழில் ஸ்தானாத்தில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று தன ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழிலில் முன்னேற்றம் அமையும். எதையும் இரமின்றி செய்யும் யுக்தியை கையாண்டு விரைவாக செய்து முடிப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் உங்களை நல்ல வழியில் வழிநடத்தி செல்வார். ஆக்கபூர்வமான பணியில் சிறப்பாக செயல்பட்டு நன்மையை அடைவீர்கள். கலைதுறையினர் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள். வருமானத்தை பெருக்கி கொள்ள உங்களின் எதிர்கால திட்டத்தை செயல்படுத்த துவங்குவீரகள்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
17.03.2023 வெள்ளி காலை 07.21 முதல் 19.03.2023 ஞாயிறு காலை 09.39 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
போட்டிகளிலிருந்து விடுபட்டு சகச நிலைக்கு வருவீர்கள். முக்கிய விடயங்களின் தனி கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உங்களின் வெளிநாட்டு பணியில் கூடுதல் சம்பள உயர்வும் இடமாற்றமும் அமையும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
தொழிலில் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர் பணியில் சிறப்பாக பணி செய்து பாராட்டு பெறுவீர்கள். சிறு முதலீடு நல்ல லாபம் தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06-07 மணிக்குள் விநாயகர் வழிபாடும் தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அவல், பொரி கடலை வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும்.