மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்

விரும்பிவற்றை தேர்வு செய்து கொள்ளும் மேச ராசி வாசகர்களே1
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதனும். சக ஸ்தானாதிபதி சந்திரன் உச்சம் பெற்று அமைவதம் பஞ்சமாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்ந்த பஞ்சமஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்ல பலனை பெற்று தரும். விரைய குருவால் சில செலவுகள் வந்தாலும் அதனை உங்களின் ராசிநாதன் மூலம் சரி செய்து கொள்வீர்கள். தடைபட்ட பல காரியம் செயல்பட துவங்கும். இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி லாபஸ்தானத்தில் இம்மாதம் இறுதியில் அமர்வதால் நீங்கள் நினைத்தை அடைய நல்ல வாய்ப்பாக அமையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். எதையும் முன் கூட்டியே தீர்மானித்து காரியங்களை விரைவுபடுத்தி செயல்படுவீர்கள். பொருளாதாரம் தன் நிறைவு பெறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
12.03.2023 ஞாயிறு இரவு 12.30 முதல் 15.03.2023 புதன் அதிகாலை 04.35 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
செயல்களில் சிறுதடை இருந்தாலும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் மனதில் பட்டதை செயல்படுத்தி நல்ல வெற்றியை காண்பீர்கள்.
 
பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கவலைகளை மறந்து குடும்பத்துடன் வெளி சுற்றுலா சென்று வருவீர்கள். கலைதுறையினருக்கு அடிக்கடி நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
அரசியலும், உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவீர்கள். இருப்பதை வைத்து இறக்க வாழ வேண்டுமென்று நினைத்து செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கு எண்ணெய் தீபமும் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியம் சிறப்பாக அமையும்.