மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மீனம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மீனம்

எல்லோருக்கு நல்லது நடக்க வேண்டுமென்று எண்ணி செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்திருப்பதும் இந்த மாதம் கடைசி வரை சனி பகவான் லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் நற்பலனைகளை பெற்று தரும். எதையும் சரியான நேரத்தில் சரியான காலத்தில் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். காரணமின்றி எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பது உங்களின் மனதிற்கு தைரியத்தையும், தொழிலிலும், உங்களின் செயலிலும் வெற்றியை பெற்றுத் தரும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உங்களின் நல்வாழ்வுக்கு வழிதேடிக் கொள்வீர்கள். கலைத்துறையினர் வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். நிழற்பட விளம்பரகளில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் மூலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேன்மை அடையும் எதிர்பார்த்த காத்திருந்த காரியம் விரைவில் நடக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
10.03.2023 வெள்ளி மாலை 06.19 முதல் 12.03.2023 ஞாயிறு இரவு 12.29 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

பூரட்டாதி 4ம் பாதம்:
 
வாழ்க்கை தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும். காலத்திற்கு தகுந்தபடி உங்களின் செயல்களை அமைத்து கொள்வீர்கள்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
தொழிலாளர்களின் வாழ்வதாரத்திற்கு உங்களால் ஆன வளர்ச்சியை உருவாக்குவீர்கள். முக்கிய ஆலோசனைகளில் உங்களின் கருத்து மதிக்கபட்டு மேன்மை அடைவீர்கள்.

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாட்டு செய்திகள் உங்களுக்க நற்பலனை பெற்று தரும். முன்கூட்டியே யோசித்து உங்களின் காரியங்களை செல்வென செய்து நற்பலன் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் வைரவரை வழிபட்டு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வரவும். வியாழன் அன்று காலை 06-07 மணிக்கு விநாயகர் வழிபாடும் செய்துவர உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை தரும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554