மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மகரம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - மகரம்

உன்னதமான செயல்களை செய்வதில் ஆர்வம் கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் அட்டமாதிபதி சூரியன் இணைவு பெற்று தொழிலில் நல்ல வருமானத்தை பெற்று தருவார்கள் ராசிநாதன் ராசியில் இருந்தாலும் இம்மாத இறுதியில் பெயர்ச்சியாகி ஜென்ம சனி விலகி நன்மைகள் பெறுவீர்கள். இதுவரை இனம் தெரியாத பல உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பொது விடயங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். கடந்த கால விட்டு போன சில காரியங்களை செயல்படுத்த தூண்டுவீர்கள். இனி உங்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் நன்றாக இருக்கும். உத்தியோகத்திலும் தொழிலில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் செயல்படுத்துப் போது சிறப்பாக நடத்துவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
05.03.2023 ஞாயிறு இரவு 10.35 முதல் 08.03.2023 புதன் காலை 09.41 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அலுவலக பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களிடம் எதை ஓப்படைத்தாலும் அதில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
 
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சிறுதடைகளிலிருந்து விடுபட்டு செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் உறவுகளில் இருந்த கசப்பு உணர்வு மறைந்து வளம் பெறுவீர்கள்.
 
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
எந்த கருத்தாக இருந்தாலும் அதனை வலியுறுத்தி காட்டுவீர்கள். பல பாதிப்புகளிலிருந்து படிபடியாக விடுதலை பெறுவீர்கள். கூட்டு தொழிலில் விருத்தி உண்டாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், பச்சை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் சீக்கிரம் நடந்து வளம் பெறுவீர்கள்.