மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - கும்பம்

உறுதியான முடிவுகளை செயல்படுத்த என்றும் விரும்பும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பலம் பெற்று தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும். சுகஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவதும் உங்களில் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கடந்த கால பண விரையம், மருத்துவ செலவு, வீண் அலைச்சல், எதிரி தொல்லை விரும்பாத வாழ்க்கை சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நற்பலன்களை பெறுவீர்கள். சாதிக்க நினைத்த எதையும் கடைசி வரை விடாமல் செயல்படுவீர்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்கி விடுவீர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு உயரும். சுபவிரைய செலவு செய்வதால் உங்களின் பொருளாதார வளம் சீராகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து மேம்படுவீர்கள். பெண்களுக்கு வேண்டிய தேவை நிறைவேறும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
08.03.2023 புதன் காலை 09.42 முதல் 10.03.2023 வெள்ளி மாலை 06.20 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
உங்களின் எதிர்கால கனவுகளை கலைய விடாமல் செயல்படுத்த துவங்குவீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு முடிந்த வரையோ விடுவீர்கள்.
சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
எந்த முடிவையும் உடனே எடுத்து செயல்படுத்த நினைப்பீர்கள். மனித நேய பணிகளில் எடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். தொழிலில் வளம் பெறுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
வெளிநாட்டு செய்திகள் நற்பலன்களை தரும். வரவேண்டிய தொகை வகூலாகும். எதிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் முன்பு உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடகிழக்கு, தென்மேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை வைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வருவதும். செவ்வாய்கிழமை சுப்ரமணியரை வழிபடுவது நன்மையும், பொருளாதார வளமும் பெற்று தரும்.