மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - கன்னி

எதை செய்தாலும் நன்கு ஆலோசித்துச் செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் தனாதிபதி சுக்கிரன் உச்ச பார்வை பெறுவதும் உங்களின் சுறுசுறுப்பான பணியில் திறம்பட செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.குடும்ப பாரத்தை இறக்கி வைத்து வெற்றி பாதையில் பயணம் செய்வீர்கள். முக்கியமான சில விடயங்களில் நன்கு ஆலோசனை செய்த பின்பு செயல்படுவீர்கள். உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் சிலருக்கு நன்மையும். சில காரியமும் நடக்கும். முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சிறந்த கலைஞர்களின் மத்தியில் நீங்களும் ஒரு அங்கீகாரம் பெறுவீர்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். பெண்களுக்கு சுதந்திரமான முடிவெடுக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். விளையாட்டுத் துறையில் நினைத்ததை சாதித்து காட்டி வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
23.03.2023 வியாழன் மாலை 04.36 முதல் 25.03.2023 சனிக்கிழமை இரவு 10.47 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அரசியலில் நல்ல ஆலோசகராகவும், கணிதத்தில் சிறந்த கணக்கானராகவும் திகழ்வீர்கள். உங்களின் தொழிலில் முன்பை விட முன்னேற்றம் காண்பீர்கள்.
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
சிறு முதலீடு மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஆலய தரிசனம் மூலம் உங்களின் காரிய அனுகூலம் கிடைக்கும்.
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
விளையாட்டு துறையில் போட்டிகளின் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பால் உ ங்களின் வாழ்க்கை, தரம் உயர்ந்து நன்மதிப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06-07 மணிக்குள் விநாயகர் வழிபாடும். செவ்வாய்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் செய்து தீபமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் காரிய தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.