மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - கடகம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - கடகம்

காலத்தை கணக்கிட்டு எதையும் செய்து வரும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு கண்டக சனி முடிகிறது. குரு பார்வை பெறுவதும் உங்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்து வருகிறது. உங்களின் ராசிநாதன் உச்சம் பெற்று இருப்பதும் உங்களின் யோகாதிபதி யுடன் இணைந்து இருப்பதும் மேன்மை தரும். தொழிலில் புதிய முயற்சிகளை கைவிட்டு எதிர்காலத்தின் நலன் கருதி இருக்கும் தொழிலில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆசை வார்த்தைகளை நம்பி நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். அடுத்தவருக்கு பிணையம் இடுவது தவிர்க்கவும். அரசியலில் தள்ளி நின்று ஆலோசனை செய்வது நல்லது. எதையும் முன்னின்று செய்தால் சில சங்கடங்கள் வந்து சேரும். வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது. மிதமான பொருளாதார நிலை நீடிக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
19.03.2023 ஞாயிறு காலை 09.40 முதல் 21.03.2023 செவ்வாய் பகல் 12.27 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

புனர்பூசம் 4ம் பாதம்:
 
குறித்த காலத்தில் காரியத்தை முடித்து விடுவீர்கள். மூத்த சகோதரின் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். தொழிலில் குறுகிய கால முதலீடு நல்ல லாபம் தரும்.

பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உடன் இருப்பவரை நம்பி எதையும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலாளர்களின் பணியில் கவனம் தேவை.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உங்களின் பேச்சில் கண்ணியம் இருக்கும். துணிச்சலுடன் செயலில் இறங்குவீர்கள். நிலையான பூர்வீக செலுத்து சம்மந்தமான விடயம் விரைவில் முடியும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, மேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30-06.00 மணிக்குள் நவகிரக வழிபாடும். மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் சீக்கிரம் நடக்கும்.