மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - தனுசு

மார்ச் மாத ராசி பலன்கள் 2023 - தனுசு

வீரியமும், பராக்கிரமமும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு இதுவரை ஏழரை சனியில் பாத சனியாக இருந்த வந்த சனிபகவான் உங்களின் மூன்றாமிடத்தில் யோக சனியாக அமர்வதும் உங்களின் ராசிநாதன் நான்காமிடத்தின் அதிபதியாகவும் இருப்பதால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் தொழில் நல்ல மாற்றத்துடன் வளம் பெறுவீர்கள். இதுவரை பட்ட வந்த சகல கஸ்டங்களும் நீங்கி மனமகிழ்ச்சியான வாழ்க்கை துவங்குவீர்கள். அடுத்த மாதம் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் ராசியை பார்ப்பது உங்களின் அடுத்த கட்ட முயற்சிக்கு நல்ல பலன் தரும் என்பதால் அதுவரை சிறு சிறு பிரச்சனைகளை சகித்து கொண்டு வாழ்க்கை நகர்த்தும் போது நன்மையே அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
03.03.2023 வெள்ளி பகல் 11.13 முதல் 05.03.2023 ஞாயிறு இரவு 10.34 மணி வரையும்.
 
30.03.2023 வியாழன் மாலை 06.18 முதல் 02.04.2023 ஞாயிறு அதிகாலை 06.00 மணி வரையும்.
 
நட்சத்திர பலன்கள்:-

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலத்தை வீண்ணடிக்காமல் காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் பணியை தடையின்றி முடித்து விடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலை துறையினருக்கு நல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழிலில் மேன்மை உண்டாகும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசியலில் சிலருக்கு பதவி கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், பலவர்ணம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வழிபட்டு வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும்.