ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

உங்களை வளம் பெற செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் தனாதிபதியுடன் லாபாதிபதி சம்மந்தப்படுவதால்... உங்களின் எண்ணங்களை செயல்படுத்த மேலும் வளம் செய்வார்கள். தொழில் ஸ்தானத்தில் ராசி அமர்ந்து குருவைப் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சனி பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் எதையும் எளிதாக செய்ய முடியாமல் போனாலும் உங்களின் சொந்த முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.
 
முக்கிய விடயங்களைப் பற்றி பேசும் போது.. நம்பிக்கையானவர்களா..! என்பதை தெரிந்து கொண்டு பேசத் தொடங்குகள். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். புதிய செலவுகள் உண்டாகும். காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பால் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேம்பாடு அடையும். 
 
குறுகிய முதலீடுகள் மூலமும், கமிசன் தொழில் மூலமும் வருமானம் கிடைக்கும். அரசியலில் நல்ல ஆலோசனை சொல்வீர்கள். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். காரண காரியமில்லாமல் எதிலும் நீங்கள் தலையிட மாட்டீர்கள். சரியான நேரத்தில் உங்களின் செயல்.. பாராட்டும்படி அமையும். 
 
கலைத்துறையினருக்கு சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார மேன்மையை அடைய செய்வார். சாதனையாளர்களாக வரவேண்டுமென்ற உங்களின் முயற்சி.. சிறப்பாக செயல்பட ஊக்கத்தைப் பெறுவீர்கள். 
 
நினைத்த காரியம் வெற்றி பெற உங்களின் செயல்பாடுகளை துரிதபடுத்துவீர்கள். பொது விடயத்தில் ஆர்வம் குறைவாக இருந்தாலும், பிறரின் உதவியை நாடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்ப தேவைக்கான பண புழக்கம் இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
21-07-2024 ஞாயிறு காலை 08.38 முதல் 23-07-2024 செவ்வாய் பகல் 12.25 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து கொண்டை கடலை நைவேத்தியம் வைத்து வணங்கி வர நீங்கள் வேண்டிய வரம் விரைவில் கிடைக்கும்.