ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

தங்களின் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் ராசிநாதனின் பார்வை தனஸ்தானத்தில் படுவதும், உங்களின் யோகாதிபதி சூரியனும், லாபாதிபதி சுக்கிரனும் உங்களின் ராசியை பார்ப்பதும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமையும். எதிரி கூட உங்களை பார்த்து ஒதுங்கி கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். அரசியலில் இருந்து வருபவருக்கு புதியதாக பொறுப்புகள் ஏற்க வேண்டிவரும்.
 
பிறரின் கண்காணிப்பில் இருந்த சில பொறுப்புகளை கூடுதலாக உங்களிடம் ஒப்படைக்க வேண்டிவரும். உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக உதவி கிடைக்கும். பொது வாழ்வில் அக்கறை இருந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்தமாட்டீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
 
வேலை பளு காரணமாக வெளி வேலைகளை குறைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு புதிய இடமாக இருப்பதை பழகி கொள்ள வேண்டிவரும். படிப்பில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். தொலைதூர தொடர்பு மூலம் சிலருக்கு நல்ல செய்தி வரும். கணணி பயிற்சியை கற்று கொள்ள ஆசைப்படுவீர்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் செலுத்தி மேன்மை கொள்வீர்கள்.
 
கலைத்துறையினருக்கு நீண்ட நாட்கள் வாய்ப்பு இன்றி இருந்த நிலைமாறி, புதிய வாய்ப்புகள் அமையும். நல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு சிலருக்கு பொருத்தமான வரன் அமையும் வாய்ப்பு கிடைக்கும். முன்னோர் வழிபாடுகளை செய்து, பெரியோர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். அன்னதானம், ஆடைதானம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
 
இனி வரும் காலம் சிறப்பாக அமைய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் அன்றாட தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரம் சிறக்கும். வாராகடன் சிலருக்கு வசூல் ஆகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
06-07-2024 சனி இரவு 11.47 முதல் 09.07.2024 செவ்வாய் மாலை 09.09 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், நீலம், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், செந்தூரமும் சாற்றி வழிபாடு செய்து வர, நினைத்த காரியம் சீக்கிரம் நடக்கும்.