டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்
வைராக்கியமும், ஆற்றலும் நிறைந்து விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்திலும், தனஸ்தானதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்து இருப்பது தனாதிபதி லாபஸ்தானத்தை பார்வை இடுவதால் பொருளாதாரத்தில் வருமானம் வந்தாலும் எதிர்பாராத செலவுகள் வந்து மறையும். லாபாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் அமர்ந்து நீசம் பெறுவதால் முன்னேற்றம் தடைபட்டு பின்பு சரியாகும்.
பாக்கியஸ்தானத்தில் சனி அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதாலும் பஞ்சமாதிபதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் எத்தனை விதமான துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை உருவாகும். உங்களின் யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் இருக்கும் இடத்தை வைத்து உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.
சுக்கிரன் கேந்திரத்திலும் சனி திருகோணத்திலும் அமர்வது உங்களுக்கு தொழிலிலும் செயலிலும் மேன்மை உண்டாகும். இம்மாதம் உங்களின் பிரியமானவரிடம் உங்களின் காதலை சொல்லும் காலமாக அமையும். பல்வேறு தடை வந்து எப்படியாவது வெளிபடுத்த வேண்டுமென்று நினைத்திருந்த உங்களின் வெளிபாடுகள் தைரியமாக சொல்லி விடுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள்.
பொது வாழ்வில் உங்களின் பங்கு சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல நிகழ்ச்சிகள் வந்து அடிக்கடி கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் லட்சிய கனவு நிறைவேறும் காலமாக அமையும். எளிமையாக செயல்பட்டு திறமுடன் செயல்படுவீர்கள்.
யாரையும் பகைக்கு கொள்ள விரும்பமாட்டீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வளம் பெறுவீர்கள். விளையாட்டு தொழில் சிறந்து விளங்குவீர்கள். தொலைதொடர்பு துறையில் மேன்மை அடைவீர்கள். புதிய தொழில் நுட்பம் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
.04-12-2024 புதன் இரவு 11.41 முதல் 07-12-2024 சனி அதிகாலை 04.27 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து வலம் வந்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டி கொள்ள சகல காரியமும் வெற்றியும் நன்மையும் உண்டாகும்.