டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

எல்லோரிடமும் அன்புடனும் நெகிழ்ச்சியுடனும் பழகும் கன்னிராசி வாசகா்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதுடன் லாபாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமா்வதுடன் நீங்கள் நினைத்த காரியம் சிறப்பாக அமையும் எதிலும் தனிதிறமை கொண்டு செயல்படுவீா்கள் குணம் நிறைந்த எண்ணங்களால் அனைவருடனும் அனுசரித்து செல்லும் பக்குவம் கொண்டு செயல்படுவீா்கள்.
 
அட்டம ஸ்தானாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் கொடுத்த இடத்தில் பணம் வர பெறுவீா்கள்.சுமையாக இருந்து வந்த சில காரியம் எளிதில் நடக்கபெறுவீா்கள்.
 
அறிவியல் ஆராச்சியாளா்கள் புதிய கண்டுபிடிப்பை பெற்று வளம் பெறுவீா்கள் கோபத்தை குறைத்து கொண்டு சரியான பாதையை தோ்வு செய்து வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும்,நல்ல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
 
அரசியலில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கெவீா்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கபெறுவீர்கள் பெண்களுக்கு முக்கியதுவம் கிடைக்கும். வேலை வாய்ப்பு தொழில் செய்ய வங்கி முலம் பொருளதார மேன்மை கிடைக்கபெறுவீா்கள்.
 
யாரையும் எதறகாகவும் முழுதாக நம்பி விடமாட்டிர்கள் திட்டமிட்டகாரியம் தாமதமானாலும் விரைவில் நடக்கும். தொழிலாளா்களின் நன்மைக்கு பாடுபட்டு அவா்களின் கோரிக்கை நிறைவேற உதவி செய்வீா்கள். உங்களின் தேவைக்கு பண வரவு கிடைக்க பெறுவீா்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
11.12.2024 புதன் காலை 10.01 முதல் 13.12.2024 வெள்ளி பகல் 12.32 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, பச்சை, வென்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழைகளில் பெருமாள் தரிசனம் அனுமன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி 5 நிமிடம் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லி வேண்டி கொண்டு வர உங்களின் அனைத்து குறையும் முழுமையாக நீங்கும்.