சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - விருச்சிகம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - விருச்சிகம்

போட்டிகளை தைரியமாக சந்தித்து வளம் பெறும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசியில் கேதுவும், வெற்றி ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன், குரு, சுக்கிரனும் அமர்ந்தும், சத்ரு ஸ்தானத்தில் செவ்வாயும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் சந்திரனும் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் எடுக்க கூடிய முயற்சிக்கு நல்ல பலனை பெறுவதுடன், கிடைக்க வேண்டிய பணபலன்கள் வந்து சேரும். நியாயமான செயல்களை எதிர்கொண்டு செயல்படுவீர்கள். புதிய பதவிகள் சிலருக்கு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடிவரும். புதிய திட்டங்களுக்கு உங்களின் பங்கு சிறப்பாக அமையும் பாதுகாப்பு பணியில் சிறந்து விளங்கி பாராட்டு பெறுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
21.02.2021 ஞாயிறு இரவு 08.34 முதல் 24.02.2021 புதன் அதிகாலை 05.48 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்:
 
வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு அமையும். நல்ல திட்டங்களை ஊக்கப்படுத்துவீர்கள். பதவிகள் சிலருக்கு கிடைக்கும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.
 
அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
பணியாளர்களில் சிலருக்கு பதவி உயர்வ கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் அமையும். புதிய தொழில் துவங்க முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்துவீர்கள்.
 
கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும் புத்திசாலித்தனமான போட்டிகளில் திறமையை காட்டி வெல்வீர்கள். நினைத்ததை அடைய எதையும் சவாலாக எடுத்து கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, கருநீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை கேதுவுக்கு, வெள்ளிக்கிழமை ராகுவுக்கு விளக்கு போட்டு வணங்கி துர்க்கையம்மனைக்கு வெள்ளை நிற பூ வைத்து வேண்டி கொள்ள சகல காரியமும் சித்தி ஆகும்.