சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - மிதுனம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - மிதுனம்

சிறந்த கல்வி அறிவையும், புத்தி கூர்மையும் கொண்ட மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் தனாதிபதி யும் சத்ருஸ்தானத்தில் கேதுவும் அட்டம ஸ்தானத்தில் சனி, சூரியன் ராசி நாதன் சுக்கிரன், குரு அமர்ந்தும் விரைய ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்து இருப்பது உங்களின் வாழ்வில் சில நேரம் சாதனைகளை செய்து ஏற்றம் காண்பீர். இந்த மாதம் முழுவதும் உங்களின் விரையாதிபதியான சுக்கிரன் அட்டமஸ்தானத்தில் அமர்வது நல்ல பலனைகளை பெற்று தருவார். தொழி லில் படிப்படியாக முன்னேற்றம் தரும். குடும்பத்தில் சச்சரவு வரும்போது அமை தியுடன் இருப்பது நல்லது. பொருளா தாரத்தில் கூடுதல் முன்னேற்றம் காண வேண்டும்.

சந்திராஷ்டம நாட்கள்:

09.02.2021 செவ்வாய் இரவு 08.55 முதல் 11.02.2021 வியாழன் இரவு 2.47 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:

வெளிநாட்டு செய்திகள் நல்ல வளர்ச்சியைத் தரும். முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் பெறு வீர்கள். துரிதமான தொழில் வளர்ச்சிக்குரிய வாய்ப்பு அமையும்.

திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

குறுகிய கால பலன்களை பயன்படுத்தி கொள்ளலாம். பாதியில் நின்ற காரியம் தொடர்ந்து நடக்கும். முக்கிய தகவல் உங்களை ஊக்கப்படுத்தும்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:

அத்தியவசியமான பணிகளை தவிர்த்து மற்ற விடயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது தொலை தூர பயணம் பயனுள்ளதாக அமையும். உறவுகளை பராமரிப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்கை, வெண்மை, ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, தென் மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சிவன் ஆலயம் சென்று வழிபட்டு ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.