சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - கன்னி

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - கன்னி

புத்திசாலித்தனமாக எதையும் யோசித்து செய்யும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தைரியஸ்தானத்தில் கேதுவும், பஞ்சம ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன், குரு, சுக்கிரனும், அட்டம ஸ்தானத்தில் செவ்வாயும், பாக்கியஸ்தானத்தில் ராகுவும் விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருக்கின்றார்கள். இனி உங்களின் முயற்சிகளுக்கு பலமான கேது இருந்து பல வழிகளில் உதவிகளை செய்து தருவார். பஞ்சம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் அமர்வது கிரக யுத்தமாக அமைந்தாலும், குரு ராசியை பார்ப்பதால் உங்களுக்கு நற்பலன்களை தநவார். ஐந்து கிரகங்களில் நடப்பு தசை புத்தி நடந்தால் அவர்களே உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி தருவார்கள். அட்டம செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது சில நேரம் சில சங்கங்டகளை தந்தாலும் நன்மையே கிட்டும் விரைய சந்திரன் செலவுகளை அதிகபடுத்தி தருவார். இருந்தாலும் நன்மை கிட்டும்.

சந்திராஷ்டம நாட்கள்:

16.02.2021 செவ்வாய் இரவு 09.45 முதல் 19.02.2021 வெள்ளி காலை 09.24 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:

அரசாங்க காரியம் சாதகமாக அமையும். சிறந்த நிர்வாக திறமையுடன் செயல்படுவீர்கள். வாழ்வில் எதை சாதிக்க நினைத்தீர்களோ அதனை அடைய நினைப்பீர்கள்.

ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

அரசியலில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். அறிவியல் பூர்வமான சிந்தனையும், அறிவு ஆற்றலும் பெறுவீர்கள். புதிய முயற்சி கைகூடும்.

சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:

விளையாட்டு போட்டிகளில் வெற்றியை பெறுவீர்கள். சாதகமாக சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்சை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

நவகிரக செவ்வாய்க்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு, சிவப்பு நிற பூ வைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லிவர எல்லா வளமும் பெற்று நன்மை அடைவீர்கள்.