சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - தனுசு

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - தனுசு

லட்சியத்தை மனதில் வைத்து கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசி நாதனும் தன காரகனும். சூரியன், புதன், சுக்கிரனும் அமர்ந்தும், பஞ்சம ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி செவ்வாயும். சத்ரு ஸ்தானத்தில் ராகுவும், பாக்கியஸ்தானத்தில் சந்திரனும், விரையஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்துள் ளார்கள். தனஸ்தானத்தில் ஐந்து அமர்ந்து உங்களின் எட்டாமிடத்தை பார்வை இடுவது. உங்களுக்கு இதுவரை தடையாக இருந்த பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவார்கள். மேலும் பஞ்சமாதிபதியே அந்த இடத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதால், மேலும் உங்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் பெற்று தரும். பண வரவுக்கு குறைவின்றி இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
24.02.2021 புதன் அதிகாலை 05.49 முதல் 26.02.2021 வெள்ளி பகல் 12.32 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
மன உளைச்சலுடன் இருந்த உங்களுக்கு தைரியமும் துணிச்சலும் செய்து பல காரியங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலில் போட்டி மறைந்து வெற்றியை பெறுவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைஞர்களுக்கு நல்ல காலமாக இருக்கும் நல்ல நிறுவனத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். சிறந்த நிர்வாக திறன் கொண்டு, செயல் பட்டு வெற்றி காண்பீர்கள்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
அரசியலிலும், அரசாங்க உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், நீலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடகிழக்கு, தெற்கு,
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனி, ஞாயிறுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வேண்டிக் கொள்ள எல்லா நன்மைகளும் கைகூடி வரும்.