சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - விருச்சிகம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - விருச்சிகம்

விவேகமும் உறுதி கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசி ஏழரை சனியில் பாத சனியாக இருந்து, வாக்கு ஸ்தானத்திலும் குடும்பஸ்தானத்திலும் இருந்த சனீஸ்வரர், பல்வேறு குழப்பங்களையும், எடுத்த காரியத்தில் தடையும். முயற்சிகள் பலன் தராமலும் இருந்த நிலையில் , வரும் 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு மூன்றாமிட அதிபதியே வந்து ஆட்சியாக அமைவதும் தன ஸ்தானாதிபதியான குருவோடு இணைவு பெற்று உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதும் கீர்த்தி ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் விளங்குகிறார்.
 
ஆரம்ப காலத்தில் உங்களின் அனைத்து காரியங்களும் மிக சிறப்பாக நடக்கும் சனி தைரியத்தையும், ஆரோக்கி யத்தையும் தருவார். நீண்ட நாட் கள் தடைபட்டு வந்த காரியம் சாதகமாக அமையும் பல வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும். 
 
குடும்ப சச்சரவுகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்ப நன்மைகளை கருதி நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையாக முடியும். சூரிய நட்சத்திரத்தில் மிக நன்மை யும்., சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருக்கும். காலம், ஊருக்கு தலைமை பொறுப்பு ஏற்பது, புதிய பதவி பெறுவது போன்ற வாய்ப்புகளும் அமையும். எதிரி கூட வீட் டிற்கு வந்து வணக்கம் போடுவார். இனி செவ்வாய் நட்சத்திரத்தில் சனி இருக்கும் காலம் போட்டிகளும், பொறாமையும், வீண் பழியும் ஏற்க வேண்டி இருக்கும் என்பதால் 2023-ல் சற்று கவனமாக இருப்பது நல்லது 
 
தொழிலாளர் வாழ்வில் மாற்றங்கள் அமையும். போது சொத்துகளை பாது காத்து வளம் பெறசெய்வீர்கள். சிலருக்கு பாதுகாப்பு பணியில் வேலை கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கையை பெற்று படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியலில் சிலருக்கு தலையீடுகள் இருக்கும்.
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளில் நவகிரக சனிக்கு மூன்று நெய் தீபமிட்டு நீல நிற பூ வைத்து கருப்பு நிற ஆடைகட்டி. உங்களின் வேண்டுதலை சொல்லிவர தொழிலிலும், உத்தியோகத்திலும் நன்மையும் வளமும் பெறுவீர்கள்.