சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மிதுனம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மிதுனம்

ஆற்றலும், நுட்ப அறிவும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு கண்ட சனியாக இருந்த சனீஸ்வரர், உடல் நல குறைகளையும்., காரிய தடையையும்  அளித்திருப்பார். இனி அட்டமாதிபதியாக அட்டம ஸ்தானத்தில் அமர்கிறார். மற்ற கிர கங்களுடன் இணையும் போது நன்மை யையும், தனித்து இருக்கும்.போது தீய பலன்களையும் தருவார்.  
 
உங்களின் செயல்பாடுகளில் பாதுகாப்பானதாகவும், உறுதி தன்மை பெற்று இருக்குமாறு பார்த்து கொள் வது நல்லது. குரு சனி மகரத்தில் சேர்க்கைப் பெறுவது. உங்களின் பலநாள் கனவாக இருந்த காரி யம் செயல் படதுவங்கும். உங் களின் தொழில் ஸ்தானத்தை சனி பார்வை இடுவதால் உழைப்பு அதிகரிக்கும். சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு விளங்குவீர்கள். 
 
பிறருக்கு உதவி செய்வதை உங்களின் கடமையாக எண்ணு வீர்கள். பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். உங்களின் தனஸ்தானத்தை பார்வை இடுவதால்,  பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி பெறும். ஆயுள் காப்பீடு சம்மந்தமாக சேமிப்புகளை செய்வீர்கள். ஆன்மீக நண்பர் களின் கூட்டு நல்ல பலனைத் தரும். 
 
உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பது உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் அமையும். புதிய காணி வாங் கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். புதிய தொழில் துவங்கும் வாய்ப்பை தள்ளி போடுவது நல்லது. முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு வளர்ச்சியை பெற்று தரும். குடும்ப பொறுப்புகளை ஏற்று நடக்க வேண்டிவரும். வெளிநாடுகளில்   வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் அதற்கு தகுந்த வருமானமும் அமையும். சனியை சுக்கிரன் பார்க்கும் போதும் சுக்கிரன் இணையும் போது சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகும். மரியாதைகளும், சமுதாயத்தில் அந்தஸ்தையும் பெறுவீர்கள். 

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை (10.30 முதல் 12.00) ஆறு தீபம் நல்லெண்ணெயில் ஏற்றி எள் கலந்த சாதம் வைத்து பறவைகளுக்கு வழங்கிவர நீங்கள் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.