ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மிதுனம்

 ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மிதுனம்

சிந்தித்து செயல்படும் திறமை வாய்ந்த மிதுன ராசி வாசகர்களே! 

உங்களின் ராசியில் இதுவரை ராகுவும், கேதுவும் அமர்ந்து ஞாபக சக்தியை இழந்தும், சிலருக்கு சிந்தனையில் ஒருகிணைப்பு இன்றியும் தவித்து வந்தீர்கள். இனி வரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிசபத்திலும், கேது விருச்சிகத்திலும் வருகிறார்கள். பொதுவாக ராகு / கேது மறைவுஸ்தானத்தில் வரும் போது பெரிய பாதிப்பை தராவிட்டாலும் ராகு விரைய செலவுகளை அதிகப்படுத்துவார். கேது உடல் நல குறைபாடுகளையும் அவசியமில்லாத கடன்படும் நிலை உருவாக்குவார். இதில் குருபார்வை பெறும் காலம் ராகுவின் பாதிப்புகள் குறையும். 

 
ராகு மிருகசிரீட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் போட்டிகளும் வீண் அலைச்சலும் இருக்கும் வெளி நாட்டில் வசிக்கும் சிலருக்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். 
 
பகுதி நேர வேலை செய்து வருபவர்களுக்கு வருமானம் பெருகும். சுயதொழிலில் சிலருக்கு லாப நஷ்டம் கலந்தே இருக்கும். வீண் அலைச்சலை தவிர்த்து விடுவது நல்லது. ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தடுமாற்றமான மன நிலையில் இருந்தாலும் நடப்புக்கு தகுந்த மாதிரி உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்.
 
கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் போது. அரசியலிலும், பொது விடயங்களில் கற்பனை வளத்துடன் நல்ல ஆலோசகராக திகழ்வீர்கள். அரசாங்கம் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேடிக்கையை வாடிக்கையாக கொள்வதை விரும்பமாட்டீர்கள்.
 
கேட்டை நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தோல் சம்மந்தமான பிரச்சனைகளும், நரம்பு சார்ந்த உடல் உபாதைகளும் உண்டாகும். சிறு மருத்துவம் செய்து குணம் அடைய செய்வீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வி அறிவில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயம் செழிக்கும் அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உடல் நலனை கவனிக்க வேண்டிவரும். தொழிலாளர்கள் முன்னேற்றம் பெறுவார்கள். மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று வருவீர்கள். 
 
விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது மனைவியுடன் இருந்த மன சஞ்சலம் நீங்கி நல்ல உறவு கொள்வீர்கள். புதிய தங்க நகை வாங்கும் வாய்ப்பு பெண்களுக்கு அமையும். திருமண பேச்சு சுமூகமாக அமையும்.