குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021

குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021

குரு பெயர்ச்சி பொதுப்  பலன்கள் 2020 - 2021
 
இதுவரை தனது சொந்த வீடான தனுசு ராசியிலும், அதிசாரமாக மகரத் திலும். மீண்டும் வக்கிரமாகி தனுசு ராசியிலும் இருந்த குரு, 15.11.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி ஞாயிறுக்கிழமை இரவு 09.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.11.2020 வெள்ளிக்கிழமை பகல் 01.23 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசிக்கு - பெயர்ச்சியாகிறார்.
 
22.01.2021 வெள்ளிக்கிழமை இரவு 10.40 மணிக்கு மேற்கு அஸ்தங்கமாகி, 21.02.2021 ஞாயிறுக்கிழமை காலை 10.36 மணிக்கு கிழக்கில் உதயமாகிறார். அதிசாரமாக 05.04.2021  முதல் 95 நாட்கள் கும்பத்திற்கு பெயர்ச்சியாகி, மீண்டும் வக்கிரமாகி மகரத்தில் வந்து அமர்கின்றார். இந்த இடைபட்ட காலங்களில் ஒரு ஆண்டிற்கு குரு மகரத்தில் இருக்கும் பலன்களை பார்ப்போம்.
 
கால புருச தத்துவப்படி ஜீவன ஸ்தானமான பத்தாமிடம் குரு அமர்வது இதுவரை பல்வேறு காரணங்களால் தொழிலை இழந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பையும். வேலை தேடுபவருக்கு வேலை வாய்ப்பை யும் பெற்று தருவார். இதில் மிக சிறப்பு என்னவெனில், பத்தாம் அதிபதியான சனியே தனது வீட்டிற்கு வரும் 26.12.2020 முதல் குருவோடு இணைவு பெறுவது இன்னும் நற்பலன்களை பெற்று தரும். மகர வீடு, குருவுக்கு நீச வீடு என்பதால் குரு தன் பலத்தை இழப்பதும், 15.11.2020 முதல்  26.12.2020 வரை குரு நீசமாகி தொழிலில் குழப்பத்தை உருவாக்குவார். உலக நாடுகளில் தன்நாட்டின் நலன் கருதி தொழிலை மேம்படுத்த புதிய தொழில் கொள்கைகளை ஆதரித்து உலக மயமாக்குதலில் சில மாற்றங்களை கொண்டு வருவார்கள். இந்த உலக மாயமாக்குதல் கொள்கை வரும் சனி பெயர்ச்சி க்கு பின்பு பலமாற்றங்கள் உருவாகி இதனால் தொழில் போட்டிகள் உருவாகி மிக பெரிய தொழில் புரட்சி உருவாகும். இதில் அனைவரும் பொருளா தாரத்தில் மேம்பாடு அடையும் வாய்ப்புகள் கிடைக் கும். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகள் கூட்டாக தொழில் மேம்பாடுகளுக்கு புதிய ஒப் பந்தங்களை செய்து கொள்வார்கள். தங்க நகைக்கு உரிய கிரகம் 
 
குரு என்பதால் தங்கம் விலை ஏற்றம் பெறுவதும், உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பை யும் பெறுவார்கள். உலக வங்கியில் முக்கியமான சில வளர்ந்த நாடுகள் பிற பின் தங்கிய நாடுகளுக் காக கடன் தரமுன் வருவார்கள். இதன் மூலம் சர்வதேச வங்கியில் புதிய வங்கி கொள்கை அமல்படுத்துவார்கள். சுற்று சூழல் மாசுபாடும் பல ஆலைகளுக்கு தடை உண்டாகும். மின்சார உற்பத்தியை பெருக்கி கொள்ள பல நாடுகள் புதிய ஒப்பந்தம் போடுவார் கள். வான் மண்டலத்தில் அதிசய நிகழ்வு நடக்கும். இதுவரை கேள்விபடாத விண் அதிசயத்தை காண்பார்கள். குரு கிரகத்தின் பல ரகசியங்கள் வெளி வரும். குரு அஸ்தங்க காலமான ஒரு மாதம் களவு, பித்தலாட்டம். வன்முறைகளால் மக்கள் பாதிக்கப் படுவார்கள். விமான விபத்து வாயு மண்டலம் மாசுபடுதலால் பாதிப்பை அடைவார்கள். பின்பு சரியாகும். அதிசார காலமான மூன்று மாதங்கள் விஞ் ஞான ஆராய்ச்சியாளர்கள் பல அதிசயங்களை உலகத்திற்கு அறிய செய்வார்கள். பல நாடுகளில் ஸ்திர மான ஆட்சி மாற்றம் உண்டாகும்.
 
பரிகாரம்: 
 
மிதுனம், துலாம், விருச்சிகம், கும்பம். சிவனை அடிக்கடி வணங்குதல், மகான்களின் ஆசிபெறுதல், மனநோயாளிக்கு உதவி செய்தல், பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்தல் மூலம் குருவால் பாதிப்பை குறைக்கலாம்.