குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - துலாம்

குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - துலாம்

துணிச்சலுடன் எதையும் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
 
இதுவரை குரு உங்களின் ராசிக்கு மூன்றா மிடத்தில் மறைந்து நன்மை யும் தீமையும் தந்து வந்தார். 15.11.2020 முதல் உங்களின் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அமர் வதும் உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் இருப்பதும் நீசப்பட்டு நீச பங்க ராஜயோக பலன்களை 26.12.2020 முதல் தர உள்ளார். இதுவரை உங்களின் கனவாக இருந்து வந்த வீடுகட்டும் திட்டம் உங்களுக்கு வெளிநாட்டு உதவிகளும் நற்பலன்களையும், பெற்று தரும்.
 
உங்களின் ராசிக்கு ஏழாமிடத்தையும் பாக்கி யஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்த்தும் உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காமல் இருந்த குரு, இனி பத்தாமிடம், அட்டம ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வை இடுவது மறைவு ஸ்தானதிபதி மறைவு ஸ்தானங்களை பார்ப்பதும், கேந்திரத்தில் அமர்ந்து பார்ப்பதும் நல்ல பலன் களையே தருவார். கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேற்றம் காணுங்கள்.
 
உங்களின் ராசிநாதன் சுக்கிரன் பார்வை பெறும்போதும், ராசியில் அமரும் போதும் சனியுடன் இணையும் போதும் உங்களின் பலன் பலமடங்கு பெருகும்.. உங்களின் கடந்த கால கஷ்டங்கள் விலகி நன்மை பெறுவீர்கள். எதிலும் உறுதிதன்மை இருந்தால் நல்ல தொழில் அமையும். தொழில் துவங்க உங்களுக்கு பொருளாதார தடை இருந்தால் அட்டமஸ்தானத்தை பார்ப்பதால் அந்த தடை நீங்கும். உங்களின் எண்ணங்களில் உதயமாகும். சகல காரியங்களும் சிறப்பாக இயங்கும். உரிமையுள்ள பல காரியங்களை எடுத்து செய்து மேன்மை அடை வீர்கள். உங்களின் ராசிக்கு குரு சூரிய நட்சத்திரத்தில் இருக்கும் காலம் தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்ல லாபகரமான சூழ்நிலையில் இருப்பீர்கள். உங்களின் தொழிலில் முழு கவனம் செலுத்தி, பொருளாதார நன்மையைப் பெறுவீர்கள். 
 
சந்திரன் நட்சத்திரத்தில் குரு அமரும் காலம் உங்களின் தொழிலில் மாற்றங்களையும். அதிக வருவாயை  ஈட்டும் வழிகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் நற்சிந்தனைகள் பேச்சுதிறன் வளமை பெறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நடக்கும். செவ்வாய் நட்சத்திரத்தில் குரு அமரும் காலம் திருமண தடைநீங்கி திருமண வாய்ப்புகள் உண்டாகும். வாகன யோகம் காணி நிலம் வாங்கும் வாய்ப்புகள் அமையும். அர்த்தர்ஷ்ட சனி  என்றாலும் குரு வுடன் இருப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது குரு அதிசாரமாக கும்பத்தில் பயணிக்கும் போது உங்கள் ராசியை பார்ப்பதால் மேலும் நற்பலன்களே உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நன்மையே உண்டாகும். 
 
பரிகாரம்: 
 
வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு 6 நெய் தீபமிட்டு வழிபாடு செய்து குரு காயத்ரி சொல்லி வர எல்லாம் நன்மையும் பெருகும்.