குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - மேஷம்

குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - மேஷம்

வலிமை பொருந்திய மனம் கொண்ட மேஷ ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி, 15.11.2020 முதல் ஓராண்டு காலம் பலன் தருகிறார். உங்களின் ராசிக்கு குரு பார்வை இடுகிறார். இதுவரை பல்வேறு நிரந்தர மற்ற தொழில் செய்து வந்தவர்களுக்கு இனி நல்ல தொழில் வாய்ப்பு அமையும். 
 
சிலருக்கு ஏற்கனவே செய்து வரும் தொழி லுக்கு மேலும் விருத்தி செய்து கொள்ளும் நிலை உண்டாகும். பலருக்கு சொந்தவீடு கட்டும் நிலை, அதற்குண்டான அனைத்து உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். வாகன வசதி பெறுவீர்கள். தொழில் செய்து வருபவருக்கு வாடகை (கூலி) வாகனம் வைத்து தொழில் செய்தவர்க்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வங்கிகள் மூலம் தொழில் கடன் பெறுதல். மேலும் தொழிலை விருத்தி செய்து கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.
 
குடும்பத்தில் நற்காரியங்கள் கைகூடும். மாணவர் களுக்கு கல்வி அறிவும், ஆராய்ச்சி சம்மந்தமான விடயங்களின் மேம்பாடும் உண்டாகும். தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். குரு பிறப்பு ஜாதகத்தில் பலம் பெற்று இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவீர்கள்.
 
லொத்தர், ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் சிலருக்கு பொருளாதார பெருக்கம் உண்டாகும். முதலீடு இல்லாமல் தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. தேவை களை அறிந்து வரவழைத்து கொள்வது நல்லது. கடல் மார்க்கமாக தொழில் செய்பவர்கள் கடன் வாங்கும் போது உரிய ஆவணங்களை சரிபார்த்து கைசாத்திடுதல் நல்லது. சனி பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் ராசிக்கு நல்ல யோக பலன்கள் கிட்டும். ஏழை எளியவருக்கு உதவி செய்தல். மனிதாபிமான உதவிகள் செய்வதில் ஆர்வம் உண்டாகும். புதிய திட்டங்கள் செயல்பட துவங்கும். 
 
உங்களின் ராசிக்கு அதிசார குருவும் நல்ல பலன் தந்தாலும். அளவோடு ஆசைபட்டால் அவஸ்தை இல்லை அதிக ஆசைபட்டால் பாரிய பாதிப்பை தந்துவிடுவார். கூட்டு சேரும் முன்பு கூட்டாளி பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கபடுத்தி கல்வியில் மேன்மை அடைய செய்வார்கள். பெண்கள் ஆசைபட்ட வாழ்க்கையை அடைவீர்கள். பொது நல விரும்பிகள் நல்ல திட்டங்களை அமுல்படுத்துவார் கள். குறைவில்லாத நிலையை பெறு வீர்கள் உயர்கல்வி மாணவர்கள் ஆராய்ச்சியில் வளம் பெறு வார்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும்.

பரிகாரம்: 
 
வியாழக்கிழமை மஞ்சள் நிற பூவைத்து (ஒன்பது) 9 விளக்கு நெய் தீபம் போட்டு ஆஞ்சநேயரை வணங்கி வர உங்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.