குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - மகரம்

குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - மகரம்

தெளிவான முடிவுகளை எடுக்கும் மகர ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இது வரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு உங்கள் ராசிநாதன் இணைந்து பல்வேறு செலவீனங்களை தந்து வந்தார்.. 15.11.2020 முதல் உங்களின் ராசியில் வந்து அமர்கிறார். பல்வேறு சோதனை களை தாண்டி உங்களின் சிந்தனைகளை சிதற செய் செயல்கள் எல்லாம் முடிவுக்கு வரும். ஜென்மகுரு பார்க்கும் இடம் சிறப்பு. பனிரெண்டு ராசிகளில் மகர ராசிக்கும் மட்டும் ஒரு சிறப்பு உண்டு. பார்த்தாலும் நன்மை செய்வார்.
 
உங்களின் ராசிக்கு குரு நீசமானாலும் சனியுடன் இணைவதால் ராஜயோக பலன்களையும் தருவார். உங்களின் ராசிநாதன் இனி உங்களுக்கு யோகங்களே தருவார். ஏழரை சனி உங்களுக்கு பாதிப்பை தராது. குரு இருக்கும் வரை வசதி களையும், நல்ல தொழில் வாய்ப்பையும் பெற்று தருவார். கலைதுறையினருக்கு நீண்ட நாள் கழித்து நல்ல வாய்ப்புகள் வரும். சொந்த ஊரிலேயே உங்களுக்கு நற்பெயரை தேடி தரும். உங்களின் தனி திறமைகளை வெளிபடுத்திக் காட்டுவீர்கள். புதிய திட்டங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் பார்வை, ராசியில் அமரும் காலங்களில் கேந்திர திரிகோணங்களில் வரும் காலம் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை பெற்று தருவார். தொழில் இல்லாதவருக்கு தொழில் வாய்ப்புகள் அமையும். மேன்மையான பதவிகளை பெறுவீர்கள். உங்களின் தலைமைக்கு விஸ் வாசமாக இருப்பீர்கள். 
 
குரு / சூரியனின் நட்சத்திர சாரத்தில் அமரும் போது உங்களுக்கு இருக்கும் செல்வாக்குகளை தக்கவைத்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துகள் சம் மந்தமான விடயங்கள் பேசி தீர்க்கும் வாய்ப்பை தரும். அரசியலில் தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்குவீர்கள். குரு / சந்திரன் நட்சத்தி ரத்தில் அமரும் காலம் உங்களின் கூட்டு தொழில் சிறப்பாக அமையும். வெளிநாட்டு வர்த்தகம் - வெளிநாடு சென்று வருதல், வெளியூர் பயணம் நன்மையாக அமையும் வருமானமும் பல மடங்கு பெருகும். குரு / செவ்வாய் நட்சத்திரத்தின் அமரும் காலம் செவ்வாய் பார்வை பெறும் போது எல்லாம் உங்களுக்கு இரட்டிப்பான பலனை தரும். காணி வாங்கும் பாக்கியம் உண்டாகும். விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். 
 
சகோதரர்களுக்குள் இருந்த பிணக்கம் தீரும். அதி சாரமாக குரு கும்பத்திற்கு செல்லும் போது உங்களின் மறைவு ஸ்தானங்களை பார்ப்பதும், சனி பெயர் ச்சியும் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் என்பதால் எல்லாம் நன்மையா கவே அமையும். எதையும் சரியான நேரத்தில் செய்து வாழ்வில் முன்னேற் றம் பெறுவீர்கள்.
 
பரிகாரம்: 
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு எட்டு நெய் தீபம் மஞ்சள் நிற பூவைத்து மஞ்சள் பொடி தூவி உங்கள் வேண்டுதலை சொல்லிவர எல்லாம் நன்மையாக அமையும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களும் கிட்டும்.