குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - கும்பம்

குரு பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2020 - 2021 - கும்பம்

நினைத்ததை சாதித்து காட்ட வேண்டுமென்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!
 
இது வரை லாப ஸ்தானத்தில் இருந்த குரு, ஏமாற்றத்தையும், விரையத்தையும் தந்து வளர்ச்சி இல்லாத நிலை யையே தந்தார். சனியும் உடன் இருந்தும் எதிர் பார்த்த எந்த வருமானமும் இல்லாமல் இருந்து வந்தது. 15.11.2020 முதல் குரு உங்களுக்கு விரையஸ்தானத்தில் வந்து அமர்வது உங்களின் வாழ்வில் மேன்மையைப் பெற செய்வார். சனி உங்களுக்கு விரையாதிபதியாகவும். ராசி அதிபதி யாகவும் வருவதால் பெரும்பாலும் லாபஸ்தாத்தில் அமரும்போது நன்மையை தருவதில்லை விரையா திபதியாக அமரும் போதும், ஏழரை சனியாக அம ரும் போதும் உங்களுக்கு நற்பலன்களைத் தருவார். 
 
பனிரெண்டாமிட அதிபதி அதில் அமரும் போது குருவுடன் இணைவதால் உங்களுக்கு செல்வம், செல்வாக்கு, தனிதிறமைகளை பெற்று தருவார். எதிலும் சிறந்து விளக்க செய்வார்கள். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல் பிரவேசம் செய்பவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் செயல்திறமைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிலும் கவனமுடன் செயல்படுவீர்கள். பாதியில நின்றகாரியம் செயல்பட துவங்கும். மிதமான செயல்களை ஊக்கப்படுத்தி மேன்மை அடைவீர்கள். மீன் விற்பனை, பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பொருட்கள் வியாபாரம் நன்மை உண்டா கும். கலைதுறையினருக்கு தேங்கி கிடந்த செயல்கள் நடைபெற துவங்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நண்பர்கள் உதவியுடன் செயல்படதுவங்கும். மாணவர்களுக்கு கல்வியின் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் நல்ல பலனை தரும்.
 
குரு / சூரியன் நட்சத்திரத்தில் இருக்கும் காலம் உங்களுக்கு அரசியலிலும், உத்தியோகத்திலும் வளர்ச்சியை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரி யங்கள் நடக்கும் குரு / சந்திரன் நட்சத்திரத்தில் அமரும் காலம் புதிய கடன் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். பழைய கடன் முடிவுக்கு வரும் குறைந்தபட்ச நன்மைகளை பெற்றாலும் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.  குரு / செவ்வாய் நட்சத்திர சாரதத்தில் குரு அமரும் போது பூமி சார்ந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
 
பாதியில் நின்ற பணி கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு வாக அதிசாரம் பெற்றாலும் உங்களுக்கு நற்பலன் களையேதரும். அனைத்தையும் இறை அன்புடன் செயல் படுத்தி னால் எல்லாம் நன்மையாக அமையும். 
 
பரிகாரம்: 
 
வியாழக்கிழமைகளில் ஐந்து நெய் தீபமிட்டு மஞ்சள் பட்டு உடுத்தி தேசிகாய் சாதம் வைத்து வணங்கி வர எல்லாம் நல்ல பலனை தருவதுடன் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். வளர்ச்சி உங்களின் முயற்சியில் மட்டுமே நிலைத்திருக்கும்.