ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2023 - சிம்மம்

ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2023 - சிம்மம்

எதையும் வெளிப்படையாக பேசி வெல்லும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி பார்வை பெறுவதும், உங்களின் யோகாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம், ஆறாமிடத்தை பார்வை இடுவதும், உங்களின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்வீர்கள். கால மாற்றத்திற்கு தகுந்த வழிகளைப் பின்பற்றி, உங்களின் செயல்பாடுகள் அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்ப்புகளை எளிதில் ஜெயித்து வெற்றியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் சிறு தடை இருந்தாலும், உங்களின் முயற்சிக்கு நல்ல வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
17.04.2023 திங்கள் இரவு 08.24 முதல் 19.04.2023 புதன் இரவு 12.20 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதிர்பாராத சில காரியம் நடக்கும் வாய்ப்பு அமையும். பாதியில் நின்ற காரியம் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
 
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினரின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். குறைந்த முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் மதிப்பு உயரும். புத்திரருக்கு நல்ல வேலை கிட்டும். வெளிநாட்டுத் தொடர்பு கிடைக்கும். படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, செவ்வாய், புதன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்ள, சகல காரியமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.