ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - ரிஷபம்

உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் வெளிபடுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் யோகாதிபதியுடன் இணைவு பெறுவதும், குரு லாப ஸ்தானத்தில் அமர்வதும் நற்பலன்களை பெற்றுத் தரும். எந்த காரியமாக இருந்தாலும் ஒரு துணையை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவீர்கள். ஆண்டின் முற்பகுதியில் உங்களின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் உண்டாகும். 
 
ஏப்ரல், மே மாதத்தில் சிலருக்கு தொழில் சம்மந்தமான பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கலைதுறையினர் சிலருக்கு தொழில் சம்மந்தமான பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கலைதுறையினர் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பெறுவீர்கள். 
 
முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். சகோதரர் களின் கருத்து வேறுபாடு களைந்து சுபகாரிய நிகழ்ச்சிகளில் இணைவீர்கள். குரு ஏப்ரலில் விரையத்திற்கு வரும்போது புதிய செலவுகள் வந்து உங்களுக்கு பணதேவைகள் வந்து சேரும். இதனால் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை தஞ்சமென்று வந்த அன்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். விளையாட்டு துறையில் சிலருக்கு பாராட்டும், பரிசும் கிடைக்கும். வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல்களில் சில தடைகள் நீங்கும். 
 
கணவன் மனைவி உறவுகளில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புத்திரர்களின் வேலையும், திருமணம் உறுதியாகும் சூழ்நிலையும் உருவாகும். அரசியலில் சிலருக்கு திடீர் பதவி கிடைக் கும். நல்ல முன்னேற்றமும், வளமான வாழ்க்கை சூழ்நிலையும் உருவாகும். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, நீலம், சிவப்பு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
6, 4, 8.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, பிப்ரவரி, ஜுலை, ஆகஸ்ட்.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும் ஞாயிற்றுகிழமை நவகிரக வழிபாடும் உங்களின் வாழ்வில் மேன்மை உண்டாக்க செய்யும்.