ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மேஷம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மேஷம்

உரிமையை எப்பொழுதும் நிலைநாட்டும் மேஷ ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் தனஸ்தானத்தில் வக்கிரமாகியும், தனாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி இணைவு பெறுவதும். உங்களின் வாழ்வில் மிகபெரிய மாற்றங்களை பெறுவீர்கள். முதல் நான்கு மாதங்கள் தொழிலிலும் செயலிலும் மந்த நிலை நீடிக்கும். பின்பு எல்லாம் சுகமாகும். எதையும் திறமையுடனும் நம்பிக்கையுடனும் செய்வீர்கள். அலுவலக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். கலைதுறையினர் எதிலும் வெற்றி காண்பீர்கள். சமயத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக்கொண்டு இருப்பீர்கள். 
 
சொந்த வீடு கட்டும் எண் ணம் சிலருக்கு இருக்கும். அதை விரைவில் தேர்வு செய்து, அதற்கான பணிகள் நடக்க ஆரம்பிக்கும் இதற்கு முன் செய்து வந்த பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உறுதியான மனநிலையில் எதையும் சாதித்து காட்டுவீர்கள். 
 
உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் சனி மார்ச் மாத்தில் பயணிப்பது மிகவும் யோகமான காலம் என்பதால் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. உறவுகளை சிலர் பிரிந்திருந்தாலும் பின்நாளில் உங்களை புரிந்து கொண்டு சேருவார்கள் மாணவர்களில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். 
 
தாயார் வழியில் சிலருக்கு அனுகூலமான செய்தியும் சிலருக்கு தாயார்வழி சொத்தும் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணித்து, இறைவனைத் தரிசனம் செய்வீர்கள். பொது நல எண்ணங்கள் வளம் பெற செய்யும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ரோஸ், மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட எண்கள்:
 
6, 8, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஏப்ரல், மே, நவம்பர்.

நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் தொடர்ந்து செய்துவர உங்களின் எண்ணம் போல வாழ்வு சிறக்கும்.