ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மீனம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மீனம்

உயர்ந்த எண்ணங்களை பெரிதும் விரும்பும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களில் ராசிக்கு முற்பகுதி ஜென்ம குரு ஆட்சி பெற்று இருப்பதும், லாபஸ்தான சனி ராசியை பார்ப்பதும் கடந்த கால மனஉளைச்சல்களை தந்து வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புனிதமான தெய்வீக பணிகளில் அதிசயமூட்டும் பல நல்ல செய்திகளை அடைவீர்கள். உங்களின் பேச்சிலும், செயலிலும் ஒருவித, உறுதி தன்மை இருக்கும். உங்களின் பயம் சிறிது சிறிதாக மறையும். ஏப்ரலில் குரு பெயர்ச்சிக்கு பின்பு சனி விரையச் சனியாக வருவது உங்களின் உடல் நலனின் கவனம் செலுத்தும்படி அமையும். 
 
மூத்த குடிமக்கள் மருத்துவ ஆலோசனைகளை பெற்று உடலை பேணி கொள்வது அவசியம். உணவு பழக்கங்களையும் சிலர் மாற்றிக்கொள்ள வேண்டிவரும். புதிய தொழில் வாய்ப்பு வந்தாலும் அதில் சற்று கவனம் கொள்வது அவசியம். உங்களின் திறமைகள் வெளிபடுத்த முடியாமல் போகும் திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்று கடவுளை நம்பி நீங்கள் செய்யும் செயல்கள் உங்களை மேலும் ஊக்கபடுத்தும் எதையும் கண்டு அஞ்சாமல் தைரியமாக சில விடயங்களை செய்வதன் மூலம் நற்பலன்களையும். பொருளாதார வளமும் பெறுவீர்கள்.
 
அரசியலில் பெரிய பலன் எதுவும் இருக்காது என்பதால் அதில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அலுவலக பணிகளில் ஏற்படும் தடைகளை விவேகமாக செயல்படுவதும். ஊழியர்களிடம் நிதானமாக போக்கைக் கடைபிடிப்பதன் மூலம் வெற்றியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
மஞ்சள், ஆரஞ்சு, பச்சை.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 5, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
மே, ஜுன், ஆகஸ்ட், நவம்பர்.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறுக்கிழமை மாலை வைரவர் வழிபாடு ராகு காலத்தில் செய்து மஞ்சள் நிற பூ வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து வித பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
0091-9789341554