விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - விருச்சிகம்

துணிச்சலுடனும், எதிர்பார்ப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு துவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும், பின்பு குரு பெயர்ச்சியும் வருகிறது. தடைகளில் இருந்து மீண்டு வர உங்களின் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். கேந்திரத்தில் ராகு / கேது அமர்வது தொழிலிலும், உத்தியோகத்தில் சில சங்கடங்கள் வந்து மறையும். இதுவரை குரு பார்வையாலும், சனியின் பார்வையினாலும் ராசிக்கு வந்த துன்பம் நீங்கி இருந்தது. தற்போது குரு பார்வை இல்லாததால் சற்று கவனமுடன் இருப்பது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் ராகு / கேது அமர்ந்தால் பணபர வசதிகளை பெற்று வருவார்கள். ராகு நான்காமிடத்தில் சனியுடன் சம்மந்தபடுவதால் சனி / ராகுவை குரு பார்வை இடுவதால் குரு பார்க்க கோடி நன்மை என்பதால்.. குருவின் அருளால் ராகு கெடுபலன்களை குறைத்து கொள்வார். சனியும் முழு வேகத்தையும் குறைத்து கொள்வார். தொழில் ஸ்தான கேது தொழிலில் புதிய முன்னேற்றம் பெற செய்வார் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமையும். சரியான பாதையை தெரிவு செய்வது நல்லது.
குரு உங்களின் ராசிக்கு எட்டாமிடத்தில் மறைவு பெறுவது நல்லதல்ல. ஆன்லைன் முதலீடு செய்யும் முன் சற்று யோசித்து செய்தல் நன்மையை பெற்றுத் தரும். கேள்வி கேட்டு தெளிவு பெற்ற பின்பு முதலீடு செய்வது நல்லது. எனினும் கிடைக்கக் கூடிய சில வாய்ப்புகள் தள்ளி போடும். எதையும் கலந்து ஆலோசனை செய்த பின்பு முடிவு செய்வது நல்லது. தன, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு அட்டமஸ்தானத்தில் அமர்வது நன்மை தராது என்றாலும் மறைவிடத்திலிருந்து மறைவு இடங்களை பார்ப்பதால் உங்களுக்கு சில நேரம் நன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட எண்கள்:
5, 6, 9.
பரிகாரங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டுக் கொள்ள சகல தடைகளும் நீங்கி நன்மை பெறுவீர்கள்.